ETV Bharat / state

Operation Kaveri: சூடான் உள்நாட்டுப் போரில் சிக்கிய 4 தமிழர்கள் மீட்பு; மதுரை வருகை! - சூடான்

சூடானில் நடைபெறும் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் ஆப்ரேஷன் காவிரி மூலம் மீட்கப்பட்டு வரும் நிலையில் இன்று மீட்கப்பட்ட நான்கு தமிழர்கள் மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர்.

உள்நாட்டு போரில் சூடானில் சிக்கி இருந்த தமிழர்களில் 4 பேர் மீட்கப்பட்டு இன்று மதுரை வந்தடைந்தனர்

author img

By

Published : Apr 27, 2023, 2:59 PM IST

Updated : Apr 27, 2023, 3:29 PM IST

Operation Kaveri: சூடான் உள்நாட்டுப் போரில் சிக்கிய 4 தமிழர்கள் மீட்பு!

மதுரை: சூடான் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட இந்தியர்களை மீட்க இந்திய அரசு "ஆப்ரேஷன் காவேரி" மூலம் முதல்கட்டமாக 360 இந்தியர்களை மீட்டது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 பேர் இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்தனர். முதற்கட்டமாக மீட்கப்பட்ட 360 பேர் ஜெத்தாவிலிருந்து புதுடெல்லிக்கு விமான மூலம் நேற்று அழைத்து வரப்பட்டனர்.

ஒன்பது தமிழர்கள் புதுடெல்லியில் இருந்து சென்னைக்கு 5 பேரும் மற்றும் மதுரைக்கு 4 பேரும் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் ஜோன்ஸ் திரவியம் என்பவரும், அவரது மனைவி ஷீபா மற்றும் அவரது மகள்கள் ஜென்சி ஜேசன், ஜோஷ்னா ஜோன்ஸ் ஆகியோர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அவர்களது சொந்த ஊரான மேட்டுப்பட்டிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மதுரை விமான நிலையத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து சூடான் நாட்டில் சிக்கி உள்ள தமிழர்களின் குடும்பத்தார் தகவல் பரிமாறிக் கொள்ள தமிழக அரசின் சார்பாக தொடர்பு கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டு உள்ளது. 9600023645, 9289516711 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த ஜோன்ஸ் திரவியம் 2001ஆம் ஆண்டு ஷீபா என்ற பெண்ணை மணந்துள்ளார். இந்த தம்பதிக்கு ஜென்சி ஜோன்ஸ் மற்றும் ஜோஷ்னா ஜோன்ஸ் என இரண்டு மகள்கள் உள்ளனர்.

ஜோன்ஸ் திரவியம் 15 ஆண்டுகளுக்கு முன், தனது குடும்பத்துடன் சூடான் நாட்டில் ஆசிரியர் பணிக்காக சென்று பணியாற்றி வந்தார். தொடர்ந்து அங்கு பள்ளி ஒன்றை ஆரம்பித்து நடந்தி வந்த நிலையில் அவரது உடைமைகள் அனைத்தும் சூடானிலேயே இருப்பதாக வேதனைத் தெரிவித்தார். தங்கள் குழந்தைகளின் கல்வி தொடர்வதற்கு இந்திய மற்றும் தமிழக அரசுகள் உதவி செய்ய முன்வர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: Operation Kaveri: சூடானில் சிக்கிய தமிழர்கள் சென்னை வருகை.. விமான நிலையத்தில் கண்ணீர் மல்க பேட்டி!

Last Updated : Apr 27, 2023, 3:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.