ETV Bharat / state

உலகின் தலைசிறந்த கண் மருத்துவர்களில் 4 பேர் மதுரையைச் சேர்ந்தவர்கள்; ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் - ஐஐஎஸ்சி

அமெரிக்காவிலுள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம், கண் மருத்துவம் தொடர்பான உலகின் சிறந்த ஆய்வாளர்களைத் தேர்வு செய்துள்ளது. அதில் மதுரையிலுள்ள அரவிந்த் கண் மருத்துவமனையைச் சேர்ந்த 4 மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அரவிந்த் கண் மருத்துவமனை
அரவிந்த் கண் மருத்துவமனை
author img

By

Published : Oct 16, 2022, 8:18 PM IST

மதுரை: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்திலுள்ள உலகப்புகழ் பெற்ற ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் மருத்துவத்துறைகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் உலக அளவில் சிறந்து விளங்கும் ஆராய்ச்சியாளர்களில் முதல் 2 விழுக்காட்டினரைப் பட்டியலிட்டுள்ளது.

அந்த ஆராய்ச்சியாளர்களின் பட்டியலில் இந்தியாவைச்சேர்ந்த சுமார் ஆயிரம் விஞ்ஞானிகளில் பொதுவாக ஐஐடி, ஐஐஎஸ்சி போன்றவற்றிலுள்ள முதல் 2 விழுக்காடு ஆராய்ச்சியாளர்கள் இடம்பெறுவர்.

அரவிந்த் கண் மருத்துவமனை
அரவிந்த் கண் மருத்துவமனை

இந்நிலையில் கண் மருத்துவத்துறையில் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சியாளர்களில் இந்தியர்கள் மட்டும் 25 பேர் உள்ளனர். அவர்களில் 8 பேர் தமிழ்நாட்டைச்சேர்ந்தவர்கள் மட்டுமன்றி, மருத்துவர்கள் ஸ்ரீனிவாசன், ரத்தினம் சிவகுமார், வெங்கடேஷ் பிரஜ்னா, லலிதா பிரஜ்னா ஆகிய 4 பேர் மதுரையிலுள்ள அரவிந்த் கண் மருத்துவமனையைச்சேர்ந்த மருத்துவர்கள் ஆவர்.

கண் மருத்துவத்துறையில் இந்திய அளவில் சிறந்து விளங்குபவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: முத்துராமலிங்கத் தேவரின் தங்க கவச விவகாரம் - தேவர் நினைவாலய பொறுப்பாளர் பரபரப்பு பேட்டி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.