மதுரை: மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெறும் அடிப்படை வசதி சார்ந்த பணிகளைத் துரிதப்படுத்துமாறு மாநகராட்சி ஆணையரைச் சந்தித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று (செப். 29) கோரிக்கை மனு அளித்தார். பின்னர் மாநகராட்சி வளாகத்தில் செய்தியாளருக்கு அவர் அளித்த பேட்டியில்,
"நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நான்கு மாதங்களில் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மதுரை மாநகராட்சியில் உள்ள பிரதான சாலைகள், தெருக்கள், மேடு பள்ளமாக உள்ளன. அதனை விரைவில் சீரமைக்க வேண்டும். மேலும் பாதாள சாக்கடை நீர் குடிநீரில் கலப்பதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயலலிதா போல் செயல்படும் ஸ்டாலின்
ஏற்கனவே கடந்த ஆட்சிக் காலங்களில் கொடுக்கப்பட்ட டெண்டர்களை ரத்துசெய்து-விட்டார்கள், அந்த டெண்டர்களில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ரவுடிகளை அடக்கி ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தார். அதேபோல தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினும் ரவுடிகளை ஒடுக்க முயற்சி எடுத்துவருகிறார் அது வரவேற்கத்தக்கது" என்று கூறினார்.
இதையும் படிங்க: ஹெச். ராஜாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு - சுப. வீரபாண்டியன் புகார்