ETV Bharat / state

டெல்லியில் தத்தளிக்கும் வெளிநாட்டுத் தமிழர்கள் - தமிழ்நாடு அரசு அழைத்து வருமா? - Latest tamil workers news

மதுரை: தென் அமெரிக்காவில் படித்தும், பணியாற்றியும் கொண்டிருந்த தமிழர்கள் இந்தியா வந்தும் தமிழ்நாடு திரும்ப முடியாமல் தத்தளிக்கின்றனர்.

டெல்லியில் தவிக்கும் தமிழர்கள்
டெல்லியில் தவிக்கும் தமிழர்கள்
author img

By

Published : May 25, 2020, 3:51 PM IST

உலகம் எல்லாம் பல்கிப் பெருகியுள்ள கரோனா வைரஸ் காரணமாக வெளிநாட்டிலுள்ள இந்தியர்கள் எல்லாம் இந்தியாவிற்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தென் அமெரிக்காவில் பணியாற்றிய மற்றும் படித்துக் கொண்டிருந்த 50 இந்தியர்கள், அங்கு உள்ள இந்தியத் தூதரகத்தின் முயற்சியால் புதுடெல்லி அழைத்து வரப்பட்டனர். அதில் 20 தமிழர்கள் உள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் அனைவரும் தமிழ்நாடு திரும்ப விரும்புகின்றனர். மதுரையைச் சேர்ந்த ஐந்து பேர், அந்தக் குழுவினரோடு உள்ள நிலையில், தென் அமெரிக்காவின் சிலி நாட்டில் முனைவர் பட்ட ஆராய்ச்சி மேற்கொண்டுள்ள மதுரையைச் சேர்ந்த முனீஸ்வரன், ஈடிவி பாரத் ஊடகத்திற்கு பிரத்யேக காணொலிப்பதிவு ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், 'நான் மதுரை தெப்பக்குளம் அருகிலுள்ள பங்கஜம் காலனியில் வசித்து வருகிறேன். தற்போது தென் அமெரிக்காவிலுள்ள சிலி நாட்டின் சாண்டியாகோ நகரில் உள்ள சிலி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறேன்.

மதுரையைச் சேர்ந்த முனீஸ்வரன் அனுப்பிய காணொலி
கடந்த மார்ச் மாதம் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டதால், அங்கேயே வீட்டில் இருக்க வேண்டிய நிலை. இந்நிலையில் அங்கு உள்ள இந்தியத் தூதரகத்திடம் நாங்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், அந்நாட்டில் இருந்து 50 இந்தியர்கள் இந்தியாவிற்கு அழைத்துவரப்பட்டு உள்ளோம். இங்கு வந்ததும் எங்களை தமிழ்நாட்டிற்கு அனுப்பி விடுவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், புதுடெல்லியிலேயே தனிமைப் படுத்தப் பட்டுள்ளோம். தற்போது ஐந்து நாட்கள் ஆகிவிட்டன. குறிப்பாக, நாங்கள் 50 பேரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ள முடியாத நிலையில் உள்ளோம்.
இந்தக் குழுவில் உள்ள 20 தமிழர்களை உடனடியாக தமிழ்நாட்டிற்கு அனுப்பினால், அங்கு நாங்கள் எங்களை தனிமைப்படுத்திக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். தலைநகர் டெல்லியிலும் தனிமைப்படுத்தப்பட்ட நாங்கள் மீண்டும் தமிழ்நாட்டிலும் தனிமைப்படுத்தப்படும் நிலை உள்ளது என்பதால், தற்போது எங்களை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வையுங்கள்.
ஆகையால், தமிழ்நாடு முதலமைச்சரிடம் நாங்கள் வேண்டிக் கேட்டுக்கொள்வது, இங்கு உள்ள 20 தமிழர்களை உடனடியாக தமிழ்நாட்டிற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.
தற்போது ஆறுமாத கர்ப்பிணி பெண் ஒருவர் எங்களோடு இருக்கிறார். என்னுடைய இன்னொரு நண்பருக்கு குழந்தை பிறந்து மூன்று நாட்கள் ஆகின்றன. அவரும் தன்னுடைய குழந்தையைப் பார்க்க வேண்டும் என்று ஆவலுடன் உள்ளார். இந்தச் சூழ்நிலையில் நாங்கள் அனைவரும் கடும் மன உளைச்சலுக்கு ஆட்பட்டு உள்ளோம். எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக எங்களை மீட்க வேண்டும்' என்றார்.

அவர்களை டெல்லியிலிருந்து அழைத்துவர தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா..?

இதையும் படிங்க: துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மருத்துவமனையில் அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.