மதுரை மாவட்டம் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்து அனைத்து வகையான பூவும் மதுரைக்கு விற்பனைக்கு வருகின்றது. உற்பத்தி, வரத்து, பண்டிகை, முகூர்த்தம் ஆகியவற்றின் காரணமாக மலர்களின் விலையில் ஏற்ற இறக்கம் இருப்பது வழக்கம்.
அந்த வகையில் தற்போது கார்த்திகை மாதம் பிறந்துள்ளதாலும் முகூர்த்த நாள்கள் அருகே வருவதாலும் கனகாம்பரத்தின் விலை ரூபாய் இரண்டாயிரம் என உச்சத்தை தொட்டுள்ளது.
மேலும், மதுரை மல்லிகையின் விலை ரூபாய் ஆயிரத்து 500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்படுகிறது. பிற பூவின் விலை நிலவரமும் அவ்வாறே உயர்ந்து காணப்படுகிறது.
பூக்களிகளின் விலை:
சம்பங்கி | ரூ.250 |
நாட்டு சம்பங்கி | ரூ.500 |
கனகாம்பரம் | ரூ.2,000 |
முல்லை | ரூ.800 |
பிச்சி | ரூ.800 |
பட்டன் ரோஸ் | ரூ.250 |
பட் ரோஸ் | ரூ.150 |
கேந்தி | ரூ.100 |
செவ்வந்தி | ரூ.250 |
இவற்றுடன் பிற பூவின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு அடுத்த சில நாள்கள் வரை நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.