மதுரை, மாட்டுத்தாவணி அருகே உள்ள மலர்ச் சந்தை, தென்மாவட்டப் பூ உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் சரணாலயமாகும். இங்கிருந்து பல்வேறு வகையான பூக்கள் சென்னை மட்டுமன்றி வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
முகூர்த்த நாள்களிலும், திருவிழாக் காலங்களில் இங்கு பூக்களின் விலை கணிசமான அளவில் உயர்ந்து காணப்படுவது வாடிக்கை. அந்த வகையில் கார்த்திகை தீபம், முகூர்த்த நாள்கள் ஆகியவற்றை முன்னிட்டு கடந்த சில வாரங்களாக பூக்களின் விலை மிக உயர்ந்து காணப்பட்டது.
இன்றைய நிலவரப்படி, மதுரை மல்லிகை 600 ரூபாய்0, அரளி 250 ரூபாய், பிச்சிப்பூ 500 ரூபாய், முல்லை 500 ரூபாய், சம்பங்கி 80 ரூபாய், செவ்வந்தி 150 ரூபாய், பட்டன் ரோஸ் 120 ரூபாய், பட்ரோஸ் 100 ரூபாய் எனப் பூக்களின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. இந்த நிலை அடுத்த சில நாள்களுக்கு நீடிக்கும் எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 59ஆவது மலர் கண்காட்சி: மலர் நாற்று நடும் பணி தொடக்கம்!