கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பயணிகள் விமான சேவைகள் கடந்த 61 நாள்களாக ரத்து செய்யப்பட்டன. அதையடுத்து மத்திய அரசின் உத்தரவின்படி மீண்டும் நிபந்தனைகளுடன் விமான சேவை இன்று(மே 25) தொடங்கியுள்ளது. அதைத்தொடர்ந்து, மதுரை விமான நிலையம் வரும் பயணிகளின் உடல் வெப்ப நிலை சரிபார்க்கப்பட்ட பின்பு அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
உடமைகளில் கிருமி நாசினிகள் தெளிக்கப்படுகிறது. மேலும் அங்கு கை கழுவும் தானியங்கி எந்திரமும் வைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையிருக்கு பி.பி.இ. கிட் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து விமான நிலைய அலுவலர்கள் கூறுகையில், "பயணிகளின் வருகையை பொறுத்து விமானங்கள் இயக்கப்படும். தற்போது உள்ள விமான சேவைகளில் மே 25 முதல் மே 30ஆம் தேதி வரை எந்த ஒரு மாற்றமும் இல்லை. மே 31ஆம் தேதிக்குப் பிறகு விமானங்கள் அதிகரிப்பு குறித்து அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: உள்நாட்டு விமான சேவை தொடக்கம்: சென்னையில் 15 விமானங்கள் ரத்து!