சென்னையில் இருந்து இன்று காலை 11.15 மணிக்கு தூத்துக்குடிக்கு இண்டிகோ விமானம் தூத்துக்குடிக்கு புறப்பட்டது. தூத்துக்குடிக்கு வரும்போது சூறைக்காற்று வீசியதால், விமானத்தை தரையிறக்க முடியவில்லை. விமான நிலையத்தில் பிற்பகல் 12.15 மணிக்கு தரையிறக்கப்பட்ட வேண்டிய விமானம், 61 பயணிகளுடன் மதுரை விமான நிலையம் நோக்கி திருப்பி விடப்பட்டது. இதையடுத்து அந்த விமானம், மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரை இறக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் மதுரை விமானநிலையத்தில் இருந்து வேன் மூலம் தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் சூறக்காற்றால் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு பிற்பகல் 2.40 மணி, 4.50 மணிக்கு செல்லக்கூடிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.