ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான சரவண பொய்கையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்கள் இறந்து மிதக்கின்றன.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் இதேபோன்று லட்சக்கணக்கான மீன்கள் இறந்துகிடந்தன. அதனை தொடர்ந்து அன்று முதல் தண்ணீர் தொடர்ந்து துர்நாற்றம் வீசி வந்ததனை போக்க அறநிலையத்துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் தண்ணீரின் துர்நாற்றத்தை போக்க முடியவில்லை.
இதனை அடுத்து சரவண பொய்கையை சுத்தப்படுத்தும் பணியை மேற்கொள்வதற்காக தாமாக முன்வந்த மும்பை பாபா அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி டேனியல் செல்லப்பா ஆலோசனைப்படி தண்ணீரை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து பணிகள் நடைபெற்றது.
தொடர்ந்து தற்காலிகமாக மின்மோட்டார் கொண்டு சுத்திகரிப்பு பணியாள், சரவண பொய்கையில் ஆக்கிஜன் அளவும், துர்நாற்றமும் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், திடீரென ஆயிரத்திற்கும் அதிகமான மீன்கள் செத்து கிடப்பதால் இதில் யாரேனும் விஷங்கள் வைத்தார்களா? அல்லது மீண்டும் ஆக்சிஜன் குறைபாடுகளால் இறந்தனவா என்று விசாரிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: மது வாங்க பணமில்லாததால் காவல் ஆய்வாளர் வீட்டில் திருடிய இளைஞர் கைது