ETV Bharat / state

விளையாட்டு உபகரணக் கடையில் திடீர் தீ விபத்து - பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதம்...!

author img

By

Published : Oct 25, 2020, 3:46 PM IST

மதுரையில் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமானது.

fire-accident-at-sports-chop-in-madurai
fire-accident-at-sports-chop-in-madurai

மதுரை சிம்மக்கல் பகுதியில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று கடையை பூட்டி விட்டுச் சென்ற நிலையில், கடையில் மின் இணைப்பில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு கடை முழுவதும் எரிந்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடையை திறக்க யாரும் வராத காரணத்தாலும், கடையில் இருந்து புகை வருவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் பெரியார் பேருந்து நிலையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

விளையாட்டு உபகரணம் கடையில் திடீர் தீ விபத்து

அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து திலகர் திடல் காவல் துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டது எனவும், இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள விளையாட்டு பொருள்கள் எரிந்து சேதமாகியுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:சென்னைக்கு ஆபத்து: 'குப்பை எரிஉலை அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.