ETV Bharat / bharat

சுசேதா கிருபளானி முதல் அதிஷி வரை.. முதல்வர் பதவியை அலங்கரித்த பெண்கள் பட்டியல்! - Women Chief ministers in India - WOMEN CHIEF MINISTERS IN INDIA

டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி பொறுப்பேற்க உள்ள நிலையில் இந்தியாவில் முதல்வர் பொறுப்பை அலங்கரித்த பெண்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம்

பெண் முதல்வர்கள் புகைப்படம்(கோப்புப் படம்)
பெண் முதல்வர்கள் புகைப்படம்(கோப்புப் படம்) (Credit - Getty Images)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2024, 1:30 PM IST

ஹைதராபாத்: இந்தியாவில் மொத்தம் உள்ள 28 மாநிலங்களில், 12 மாநிலங்களில் 16 பெண் முதல்வர்கள் பதவி வகித்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது டெல்லி முதல்வராக கல்வித்துறை அமைச்சராக உள்ள அதிஷி(Atishi) இணைய உள்ளார்.

சுசேதா கிருபளானி: உத்தரப் பிரதேசத்தின் முதல் பெண் முதல்வரான இவர், இந்திய தேசிய காங்கிரஸ்(indian national congress) கட்சியைச் சேர்ந்தவர். 1963 அக்டோபர் முதல் 1967 மார்ச் வரை முதல்வர் பொறுப்பு வகித்துள்ளார்.

நந்தினி சத்பதி: ஒடிசாவின் முதல் மற்றும் ஒரே பெண் முதல்வரான இவர், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 1972 ஜூன் முதல் 1973 மார்ச் வரை மற்றும் 1974 மார்ச் முதல் 1979 டிசம்பர் வரை முதல்வர் பொறுப்பு வகித்துள்ளார்.

சசிகலா ககோட்கர்: கோவா மாநிலத்தின் முதல் மற்றும் ஒரே பெண் முதல்வரான இவர், மகாராஷ்டிரவாடி கோமாந்தக் கட்சியைச் சேர்ந்தவர். 1973 ஆகஸ்ட் முதல் 1979 ஏப்ரல் வரை முதல்வர் பொறுப்பு வகித்துள்ளார்.

சையதா அன்வேரா தைமூர்: அசாம் மாநிலத்தின் முதல் மற்றும் ஒரே பெண் முதல்வரான இவர், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 1980 டிசம்பர் முதல் 1981 ஜூன் வரை முதல்வர் பொறுப்பு வகித்துள்ளார்.

ஜானகி ராமச்சந்திரன்: தமிழ்நாட்டின் முதல் பெண் முதல்வரான இவர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1988 ஜனவரி 7 முதல் 1988 ஜனவரி 30 வரை முதல்வர் பொறுப்பு வகித்துள்ளார்.

ஜெ.ஜெயலலிதா: தமிழ்நாட்டில் 5 முறை முதல்வராக இருந்துள்ள இவர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்(AIADMK) கட்சியைச் சேர்ந்தவர். 1991 ஜூன் முதல் 1996 மே வரை மற்றும் 2001 மே முதல் 2001 செப்டம்பர் வரை மற்றும் 2002 மார்ச் முதல் 2006 மே வரை மற்றும் 2011 மே முதல் 2014 செப்டம்பர் வரை மற்றும் 2015 மே முதல் 2016 வரை முதல்வர் பதவி வகித்துள்ளார்.

மாயாவதி: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர் இந்தியாவின் முதல் தலித் பெண் முதல்வர் ஆவார். பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த மாயாவதி, கடந்த 1995 ஜூன் முதல் 1995 அக்டோபர் வரை மற்றும் 1997 மார்ச் முதல் 1997 செப்டம்பர் வரை மற்றும் 2002 மே முதல் 2003 ஆகஸ்ட் வரை மற்றும் 2007 மே முதல் 2012 மார்ச் வரை முதல்வர் பதவியில் இருந்துள்ளார்.

ராஜிந்தர் கவுர் பாதல்: பஞ்சாப் மாநிலத்தின் முதல் மற்றும் ஒரே பெண் முதல்வரான இவர், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். கடந்த 1996 ஜனவரி முதல் 1997 பிப்ரவரி வரை முதல்வர் பொறுப்பு வகித்துள்ளார்.

ராப்ரி தேவி: பீகார் மாநிலத்தின் முதல் மற்றும் ஒரே பெண் முதல்வரான இவர், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர். கடந்த 1997 ஜூலை முதல் 1999 பிப்ரவரி வரை மற்றும் 1999 மார்ச் முதல் 2000 மார்ச் வரை மற்றும் 2000 மார்ச் முதல் 2005 மார்ச் வரை முதல்வர் பதவியில் இருந்தவர்.

சுஷ்மா ஸ்வராஜ்: டெல்லியின் முதல் பெண் முதல்வரான இவர் பாஜக-வைச் சேர்ந்தவர். கடந்த 1998 அக்டோபர் முதல் 1998 டிசம்பர் வரை முதல்வர் பதவியில் இருந்துள்ளார்.

ஷீலா தீட்சித்: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், கடந்த 1998 டிசம்பர் முதல் 2013 டிசம்பர் வரை டெல்லி முதல்வராக பொறுப்பு வகித்துள்ளார்.

உமா பாரதி: மத்திய பிரதேசத்தின் முதல் பெண் முதல்வரான இவர் பாஜகவைச் சேர்ந்தவர். கடந்த 2003 டிசம்பர் முதல் 2004 ஆகஸ்ட் வரை பொறுப்பில் இருந்துள்ளார்.

வசுந்தரா ராஜே: ராஜஸ்தான் மாநிலத்தின் முதல் பெண் முதல்வரான இவர், பாஜகவைச் சேர்ந்தவர். கடந்த 2003 டிசம்பர் முதல் 2008 டிசம்பர் வரை மற்றும் 2013 டிசம்பர் முதல் 2018 வரை முதல்வர் பொறுப்பில் இருந்துள்ளார்.

மம்தா பானர்ஜி: அனைத்திந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த இவர், மேற்கு வங்கத்தில் கடந்த 2011 மே முதல் தற்போது வரை முதல்வர் பதவியில் உள்ளார்.

ஆனந்தி பென் படேல்: குஜராத் மாநிலத்தின் முதல் பெண் முதல்வரான இவர் பாஜகவைச் சேர்ந்தவர். கடந்த 2014 மே முதல் 2016 ஆகஸ்ட் வரை பொறுப்பில் இருந்துள்ளார்.

மெகபூபா முஃப்தி: மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவர் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2016 ஏப்ரல் முதல் 2018 ஜூன் வரை முதல்வர் பொறுப்பு வகித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.