ETV Bharat / business

தங்கக் கடன் வாங்க சரியான நிறுவனம் எது? கண்டுபிடிக்க ஈஸியான வழிகள்! - Choose Right Gold Loan Provider - CHOOSE RIGHT GOLD LOAN PROVIDER

சாதகமான விதிமுறைகள், போட்டி வட்டி விகிதங்கள் மற்றும் உங்கள் அடமானம் வைக்கப்பட்ட தங்கத்திற்கான பாதுகாப்பை உறுதி செய்வது, வாடிக்கையாளர்களிடம் நட்பான அணுகுமுறை, தங்கக் கடன் பெறுபவர்கள் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சமாகும்.

தங்க நகை அடமானக் கடன் (கோப்புப் படம்)
தங்க நகை அடமானக் கடன் (கோப்புப் படம்) (Credits - Getty Images)
author img

By PTI

Published : Sep 25, 2024, 5:22 PM IST

மும்பை: உலக அளவில் தங்கம் மிகவும் மதிப்புமிக்க சொத்துகளில் ஒன்றாக திகழ்கிறது. தங்கமானது, கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், மங்களகரமான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படுவதுமாக உள்ளதோடு மட்டுமின்றி, இக்கட்டான நேரங்களில் உடனடியாக கடன் வசதிகளை பெறும் ஆபத்பாந்தவனாகவும் உள்ளது.

கடன் வாங்குபவர்கள் சாதகமான கடன் விதிமுறைகளையும், சிறந்த வாடிக்கையாளர் சேவையையும் பெறுவதற்கு சரியான தங்கக் கடன் வழங்குநரைத் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியமானது. தங்கக் கடன் என்பது ஒரு நிதி நிறுவனத்திடமிருந்து நிதியைப் பெறுவதற்காக கடன் வாங்குபவர்கள் தங்கள் தங்க நகைகள் அல்லது ஆபரணங்களை பிணையமாக அடமானம் வைக்கும் ஒரு பாதுகாப்பான கடன் ஆகும்.

கடன் தொகையானது பொதுவாக தங்கத்தின் தற்போதைய சந்தை மதிப்பின் சதவீதமாகும். இது கடன்-மதிப்பு விகிதம் (எல்டிவி) என அழைக்கப்படுகிறது. விரைவாக பணமாக்குதல், குறைந்தபட்ச ஆவணங்கள் மற்றும் திருப்பிச் செலுத்தும் விருப்பங்களில் வாடிக்கையாளர்களுக்கு நெகிழ்வுத்தன்மை போன்ற அம்சங்கள் காரணமாக தங்கக் கடன்கள் மக்களிடையே முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இதையும் படிங்க: சோனி கேமராவுடன் வரும் விவோ V40e: சினிமா தர வீடியோ, பெரிய பேட்டரி உடன் பல அம்சங்கள்!

மருத்துவ அவசரம், கல்விச் செலவுகள் அல்லது தனிப்பட்ட தேவை போன்ற குறுகிய கால நிதி தேவைகளைப் பூர்த்தி செய்ய தங்கக் கடன்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. தங்கக் கடன் பெறும்போது சிறந்த கடன் வழங்குநரைத் தேர்ந்தெடுப்பது, கடன் பெறும்போது சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து இங்கு காண்போம்:

1.வட்டி விகிதம்:

தங்கத்தின் மீதான கடனைக் கருத்தில் கொள்ளும்போது, ​​வெவ்வேறு நிதி நிறுவனங்கள் வழங்கும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது முக்கியம். சாதகமான வட்டி விகிதங்களை பெறுவது கடனுக்கான மொத்த செலவைக் கணிசமாகக் குறைக்கும். இது காலப்போக்கில் பெரிதும் பயனளிக்கும்.

2.கடன் மதிப்பு விகிதம் (எல்டிவி):

கடன் மதிப்பு விகிதம் உங்கள் தங்கத்தின் மதிப்புக்கு நீங்கள் எவ்வளவு கடன் பெற முடியும் என்பதை தீர்மானிக்கிறது. அதிக எல்டிவி மூலம் நீங்கள் அதிக நிதியைப் பெறலாம். ஆனால் இது கடுமையான விதிமுறைகளுடன் கூடியது. எனவே உங்கள் நிதித் தேவைகளுக்கு ஏற்ற சமநிலையைக் கண்டறிவது முக்கியம்.

3.கடனை திருப்பிச் செலுத்தும் நெகிழ்வுத்தன்மை:

மாறுபட்ட கால அளவுகள் அல்லது பகுதியளவு பணம் செலுத்தும் வசதி போன்ற கடனை திருப்பிச் செலுத்தும் சாதகமான அம்சங்களை வழங்கும் கடன் வழங்குநரைத் தேர்வு செய்ய வேண்டும். இது உங்கள் நிதிகளை மிகவும் திறம்பட நிர்வகிக்கவும், கடன் தொகையை உரிய நேரத்தில் செலுத்தவும் உதவும்.

4.விரைவாக கடன் வழங்கல்:

கடன் விண்ணப்பம் முதல் விநியோகம் வரை விரைவான செயலாக்கம், கடன் வாங்குபவர்கள் தேவைப்படும் நேரங்களில் நிதியை உடனடியாக அணுகுவதை உறுதி செய்கிறது.

5.குறைந்தபட்ச ஆவணங்கள்:

தொந்தரவில்லாத டிஜிட்டல் செயல்முறையுடன் கூடிய குறைந்தபட்ச ஆவணப்படுத்தல் வாடிக்கையாளர் சிரமங்களை குறைக்கும். மேற்கண்ட அம்சங்கள் மட்டுமின்றி, சாதகமான விதிமுறைகள், போட்டி வட்டி விகிதங்கள் மற்றும் உங்கள் அடமானம் வைக்கப்பட்ட தங்கத்திற்கான பாதுகாப்பை உறுதி செய்வது, வாடிக்கையாளர்களிடம் நட்பான அணுகுமுறை, தங்கக் கடன் பெறுபவர்கள் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சமாகும். இதற்கு சரியான தங்கக் கடன் வழங்குநரைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.

எல்டிவி விகிதம், திருப்பிச் செலுத்தும் விருப்பங்கள் மற்றும் கடன் வழங்குநரின் நம்பகத்தன்மை போன்ற காரணிகளை கவனமாக மதிப்பீடு செய்வது, ஆகியவை உங்கள் நிதி இலக்குகளுடன் ஒத்துப்போகும் முடிவை எடுக்க உதவும். மேலும், வெளிப்படையான, பாதுகாப்பான மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட தங்கக் கடன் சேவை வழங்கும் நிறுவனங்களை தேர்வு செய்ய வேண்டும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.