கோயம்புத்தூர் : கோயம்புத்தூர் மாவட்டம், தெற்கு தொகுதிக்குட்பட்ட இராமநாதபுரம் மண்டல், பூத் எண் : 1 கொண்டசாமி லேஅவுட், அலமேலு மங்கம்மாள் லே அவுட் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலர் தங்களை பாஜகவில் உறுப்பினர்களாக இணைத்து கொண்டதற்கான உறுப்பினர் அட்டையை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிரதமர் மோடி பாஜகவில் இணையுமாறு மக்களிடம் வலியுறுத்தி இருந்தார். அதன் அடிப்படையில் இதுவரை நான்கு கோடி உறுப்பினர்கள் கட்சியில் சேர்ந்துள்ளனர். தொகுதியில் ஒவ்வொரு நிர்வாகிகளுக்கு பூத் ஒதுக்கப்பட்டு, அதில் உறுப்பினர் சேர்க்கை பணி நடைபெற்று வருகிறது.
வீடு வீடாகச் சென்று உறுப்பினர்களை சேர்த்து வருகிறோம். கட்சியில் அதிக அளவில் பெண்கள் சேர்ந்திருப்பது மிகவும் உற்சாகத்தை அளிக்கிறது. வரக்கூடிய நாட்களில் கட்சியில் உறுப்பினர்கள் சேர்ப்பது தீவிரமாக நடைபெறும். முதன் முதலில் தொழில்நுட்ப அரசியல் கட்சியாக செயல்படுவது பாஜக தான்.
GST தொடர்பாக குழு அமைக்கப்பட்டு, ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசு சேர்ந்து தான் ஜிஎஸ்டி குறித்து முடிவு எடுக்கிறார்கள். இது தொடர்பாக மாநில நிதி அமைச்சரை சந்திக்க இருக்கிறேன். விவசாயம் மற்றும் கோவை விமான நிலையம் விரிவாக்கம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர்களை சந்திக்க உள்ளோம்.
இதையும் படிங்க : "வலுத்த கோரிக்கை பழுக்கும் நேரம்" முரண்படுகிறாரா துரைமுருகன்? - deputy chief minister issue
ரேஷன் கார்டில் போலியாக நபர்கள் சேர்ப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அது ஏழைகளுக்காக வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாநில அரசு விசாரணை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்கவுண்டர் செய்தால் பொதுமக்களை சமாதானம் செய்ய முடியும் என்று திமுக அரசாங்கம் செய்து வருகிறது. தமிழக அமைச்சரவையில் மாற்றம் அமைச்சர்களுக்கு இருக்கலாம். ஆனால் ஏமாற்றம் பொதுமக்களுக்கு தான் இருக்கும்.
சாதிவாரி கணக்கெடுப்பை தாராளமாக மாநில அரசு நடத்தலாம். ஆனால் மத்திய அரசை குறை சொல்கிறார்கள். மத்திய கல்விக் கொள்கையை மட்டும் மாநில அரசின் கீழ் செயல்படுத்த வேண்டும் என்று திமுக கூறுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.
பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு
— Vanathi Srinivasan (@VanathiBJP) September 25, 2024
பாரத பிரதமர் @narendramodi அவர்களின் தலைமைக்கு வலு சேர்க்கும் விதமாக கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட
இராமநாதபுரம் மண்டல், பூத் எண் : 1 கொண்டசாமி லேஅவுட், அலமேலு மங்கம்மாள் லே அவுட் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலர் தங்களை பாஜகவில்… pic.twitter.com/VjApGX0wHd
பெண்களுக்கு எதிராகவும், பட்டியலின மக்களுக்கு எதிராகவும் நடக்கும் வன்கொடுமைகளை திமுக அரசு கண்டும் காணாமல் கடந்து செல்கிறது. ஆனால், சமூக வலைத்தளங்களில் ஏதாவது பதிவு போட்டால் அவர்களை உடனடியாக கைது செய்கிறார்கள்.
மத்திய அரசு கொடுக்கின்ற நிதிகளை மாநில அரசு திரும்பி அனுப்புகிறது. ஆனால், மத்திய அரசு பணம் கொடுக்கவில்லை என்று தொடர்ச்சியாக திமுக அரசு கோரிக்கை வைத்து வருகிறது. நொய்யல் ஆற்றில் நேரடியாக மனிதக் கழிவுகள் கலந்து கொண்டிருக்கிறது. இந்த மாதிரியான விஷயங்களை மாநில அரசு தடுத்து நிறுத்த வேண்டும்" என்றார்.