ETV Bharat / state

ஜிஎஸ்டி மாநாட்டுக்குத் தடை விதிக்கக்கோரி மனு..! மனுதாரருக்கு அபராதம் விதித்த நீதிபதிகள் - ஜிஎஸ்டி மாநாடு

மாமல்லபுரத்தில் தனியார் விடுதியில், மத்திய அரசு சார்பாக நடைபெற உள்ள ஜி.எஸ்.டி., மாநாட்டுக்கு தடை விதிக்கக்கோரி, உயர் நீதி மன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை, தள்ளுபடி செய்த நீதிபதிகள், மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.

gst conference at Mamallapuram  ban gst conference  fine for petitioner who ask to ban gst conference  madras high court Madurai branch  சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை  ஜிஎஸ்டி மாநாட்டுக்கு தடை விதிக்க கோரி மனு  ஜிஎஸ்டி மாநாடு  ஜிஎஸ்டி மாநாட்டுக்கு தடை விதிக்க கோரியவருக்கு அபராதம்
ஜிஎஸ்டி மாநாடு
author img

By

Published : May 1, 2022, 4:15 PM IST

மதுரையைச் சேர்ந்த ஜோஸ் என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத்துறையின் ஜி.எஸ்.டி. வருடாந்திர மாநாடு என்ற பெயரில் 2 நாட்கள் நிகழ்ச்சிக்கு அறைகள் மற்றும் அரங்கு முன்பதிவு செய்யப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடக்க இருந்த அந்த மாநாடு வருகிற 5, 6ஆம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த மாநாட்டிற்காக தனியார் ஹோட்டல் நிறுவனத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் செலுத்தப்படுவதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இந்தத்தொகை முழுவதும் மக்களின் வரிப்பணம் ஆகும். இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த டெல்லியில் அரசு சார்பில் பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளன.

எனவே, இந்த மாநாட்டினை அரசு கட்டடங்களில் நடத்த வேண்டும் என்று உடனடியாக மத்திய நிதித்துறை, வருவாய்த்துறை செயலாளர்களுக்கு புகார் மனு அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, எனது மனுவின் அடிப்படையில் மகாபலிபுரத்தில் மத்திய மறைமுக வரி மற்றும் கலால் வரித்துறை சார்பில் நடக்க உள்ள மாநாட்டிற்குத் தடை விதிக்க வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “இந்த வழக்கை பொதுநலன் சார்ந்த வழக்கு எனக் கூற முடியாது. இது போன்ற வழக்குகள் மத்திய-மாநிலத்திற்கு இடையே பாதகத்தை ஏற்படுத்தும். எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.

மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை வரைவோலையாக எடுத்து, அத்துடன் மன்னிப்பு கடிதத்தையும் சேர்த்து மத்திய நிதித்துறைச் செயலாளருக்கு 4 வாரத்தில் அனுப்ப வேண்டும். இது குறித்து நீதிமன்றத்தில் அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: இரட்டை பதவி உயர்வு கோரிய உதவி பேராசிரியர்களின் மனுக்கள் தள்ளுபடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.