மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் தெய்வானை என்ற பெயரில் பெண் யானை உள்ளது. அந்த யானைக்குப் பாகனாக இருந்து காளிராஜன் என்பவர் தினமும் அதனைப் பராமரித்துவந்தார்.
கடந்த மே 24ஆம் தேதி பாகன் காளிராஜன் யானையைக் குளிக்க வைக்க அழைத்துச் சென்றுகொண்டிருந்தார். அப்போது திடீரென யானை தெய்வானைக்கு மதம் பிடித்தது. ஆக்ரோஷமான தெய்வானை பாகன் காளிதாஸை திடீரென தூக்கி வீசி மிதித்தது.
இதில் படுகாயமடைந்த காளிதாஸை அங்கிருந்தவர்கள் மீட்டு திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, பாகன்களின் கட்டுப்பாட்டில் இல்லாத கோயில் யானை தெய்வானை திருச்சியிலுள்ள யானைகள் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டது. இந்நிலையில், காளிதாசனின் குடும்பத்திற்குத் திருப்பரங்குன்றம் கோயில் துணை ஆணையர் ராமசாமி மற்றும் யுனைடெட் இந்தியா காப்பீடு மேலாளர் வாசுதேவன் சார்பில் ரூ.50 ஆயிரம் காசோலை வழங்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் கோயில் யானை தெய்வானை ஆக்ரோஷமாக நடந்து கொள்வது இது மூன்றாவது முறையாகும். ஏற்கனவே பணியாற்றிய இரண்டு பாகன்களைத் தாக்கியது குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க: தருண் கோபியின் கம்பீரம் யானை!