ETV Bharat / state

'உலகின் சிறந்த மனித வளம் மிக்க மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும்' - நிதியமைச்சர் பிடிஆர் - tn best human resource state

உலகத்திலேயே சிறந்த மனித வளம் மிக்க மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும் என்பது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இலக்கு என்று ஆய்வுக் கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

நிதியமைச்சர் பிடிஆர்
நிதியமைச்சர் பிடிஆர்
author img

By

Published : Jul 22, 2021, 11:23 PM IST

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை சார்ந்த பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "பொதுவாக நிதி மேலாண்மையும், ஆளுமையும் நல்லாட்சியும் ஒன்றாக செயல்பட வேண்டும். நிதியை தேவையான அளவில் ஈட்டுவது அதனை முறையாக ஈட்டுவது யாரிடமும் இருந்து எவ்வளவு நிதி ஈட்ட வேண்டும்.

இதனை சரியாக செயல்படுத்துவதுதான் அரசாங்கத்திற்கு அழகு. துறை அமைச்சர் தெரிவித்தபடி அடிப்படை பொருளாதாரம் படித்தால் மூலதன செலவை எந்தெந்த மாநிலம் அதிகமாக்குகிறதோ, அந்தந்த மாநிலங்களில் வளர்ச்சி இருக்கும்.

70,000 முதல் 80 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம்

2014ஆம் ஆண்டுக்கு முன் தமிழ்நாடு அரசின் வருமானம், உற்பத்தியில் 10 விழுக்காடாக இருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக குறைந்து 6.5 சதவீதமாக இருக்கிறது.

கருணாநிதி ஆட்சிக்காலத்தில் 11.5 சதவீதமாக இருந்த வருமானம் தற்போதைய காலகட்டத்தில் 7.5 சதவீதமாக குறைந்துவிட்டது. கரோனா காலத்தில் 6.5 சதவீதமாக குறைந்துவிட்டது. சுமார் 70,000 முதல் 80 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வர வேண்டி உள்ளது. இது குறித்து விரிவாக வெள்ளை அறிக்கையில் வெளியிடப்படும்.

எந்தெந்த துறைகளில் இருந்து எவ்வளவு தரவேண்டும் என்பது அரசியல் காரணங்களுக்காக எடுக்கப்படுவது அல்ல. நிதி ஆதாரங்களை திருத்துவதன் மூலம் பல்வேறு திட்டப் பணிகளை நிறைவேற்ற முடியும்.

உதாரணமாக 80,000 கோடி என்பது நிதிநிலையில் ஊரக வளர்ச்சித்துறை, மாநகராட்சி துறை கல்வி ஆகிய மூன்று துறைகளுக்கும் சேர்த்து செய்யப்படும் செலவினம் ஆகும்.

madurai
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

மூலதன செலவு

கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்த மூலதன செலவு ஒரு லட்சம் கோடி ரூபாய்கூட இல்லை. அதாவது வருடத்திற்கு இருபத்தி ஐந்தாயிரம் கோடிகூட செலவிடவில்லை. நல்லாட்சியின் அடையாளம் என்பது உற்பத்தியில் 3 சதவீதம் முதலீடு செய்ய வேண்டும் .

ஆனால் கடந்த வருடம் உற்பத்தியில் 1.5 சதவீதம்கூட செய்யவில்லை. அதனால் கூடுதலாக 30 ஆயிரம் கோடி முதல் 40,000 கோடி ரூபாய்வரை மூலதன செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.

உலகின் சிறந்த மனித வளம் மிக்க மாநிலம் தமிழ்நாடு

இந்தியாவிலேயே ஏன் தென் கிழக்கு ஆசியாவிலேயே மூலதனம் செய்யக்கூடிய இடமாக தமிழ்நாடு திகழ வேண்டும். உலகளவில் மனித வளம் மிகுந்த மாநிலமாக இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு செல்பவர்கள் சிறந்த தொழில்நுட்ப வல்லுனர்களாக மாறும் வகையில் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும் என்பதுதான் இலக்கு.

இதற்காக பல அடிப்படைத் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும். அத்தகைய திருத்தங்களை கொண்டு வர தயாராக இருக்கிறோம் என முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.