மதுரை மாவட்டம், திருப்பாலை யாதவர் மகளிர் கல்லூரியில் கரோனா சித்த மருத்துவ மைய திறப்பு நிகழ்வில், நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல், வணிக வரித்துறை அமைச்சர் பி. மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் பேசியதாவது, "தமிழ்நாட்டிற்குத் தேவையான ஆக்ஸிஜன், கரோனா தடுப்பு உபகரணங்கள் வெளிநாடுகளில் இருந்தும்; வெளிமாநிலங்களில் இருந்தும் இன்னும் இரண்டு நாட்களில் வர இருக்கிறது. குழந்தைகளுக்குக் கரோனா சிகிச்சை வார்டுகள் அமைக்கப்படும்.
தேர்தலின்போது ஒரு நாள் கூட முகக்கவசம் இல்லாமல் நாங்கள் பரப்புரையில் ஈடுபட்டது இல்லை. அதேபோல் மக்களும் கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்" என்றார்.
இதைத் தொடர்ந்து வணிக வரித்துறை அமைச்சர் பி. மூர்த்தி கூறியதாவது, "கரோனா கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு கரோனா பாதிப்பு ஆரம்பத்தில் உள்ளவர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை பெறும் வசதிகள் ஏற்படுத்தப்பட இருக்கின்றன. மதுரையில் தொற்றை முற்றிலும் போக்குவதற்கு திமுக அரசு பாடுபடும்" என்றார்.
இதையும் படிங்க: தொழில்நுட்ப கோளாறு: ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிறுத்தம்!