தற்போதைய, கரோனா பேரிடர் காலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களுக்குப் பல்வேறு தனிநபர்களும் தன்னார்வ அமைப்புகளும் உதவி புரிந்து வருகின்றன. இந்நிலையில் மதுரை மாநகர எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர், கலைவாணி.
இவர், மதுரை மாநகரில் உள்ள ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், தெருவோரங்களில் வசிக்கும் ஆதரவற்ற சாலையோரவாசிகளுக்கும், தன்னுடைய சொந்த செலவில் உணவுமட்டுமன்றி, போர்வைகளும் நிவாரணமாக வழங்கி தன்னுடைய மனிதநேயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பெண் காவல் ஆய்வாளர் கலைவாணியின் இந்தச் செயல் சமூக வலைத்தளங்களில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது. கடந்த கரோனா முதல் அலையின்போது மதுரை சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் இவர் பணியாற்றிய தருணம், கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றவர்களுக்குத் தன்னுடைய சொந்தப் பணத்தில் பல்வேறு உதவிகளை வழங்கிப் பாராட்டு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 9.27 லட்சம் குழந்தைகளுக்கு மோசமான ஊட்டச்சத்து குறைபாடு' ஆர்டிஐ தகவல்!