விவசாயப் விளைபொருள்கள் வர்த்தக மசோதா, விவசாய விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிப் பொருள்கள் திருத்த சட்ட மசோதா ஆகிய மூன்று வேளாண் மசோதாக்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. புதிய வேளாண் சட்டங்களுக்கு மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சிந்தாமணி பகுதிகளில் புதிய வேளாண் மசோதாவுக்கு விவசாயிகள் தங்களின் வயல்களில் கருப்புக்கொடி ஊன்றி எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது விவசாயிகள் புதிய வேளாண் மசோதாவால் விவசாயிகளுக்கு எந்தவித லாபமும் இல்லை. தனியார் முதலாளிகள் அதிக லாபம் பெற மத்திய அரசு துணை போகிறது என குற்றஞ்சாட்டினர்.
இதையும் படிங்க: வேளாண் திருத்த சட்டம்: தேசிய விவசாயிகள் சங்கத்தினர் மாட்டு வண்டி போராட்டம்