மதுரை மாவட்டம் வரிச்சியூர் பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் ரவுடி வரிச்சியூர் செல்வம். இவர் மீது கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. திமுக நிர்வாகியாகவும் பதவி வகித்தவர். தன்னை வரிச்சியூர் செல்வம் வித்தியாசமாக அடையாளப்படுத்திக் கொள்வதில் விருப்பம் கொண்டவர்.
தங்க நகையின் மீது ஈர்ப்பின் காரணமாக, இவர் தனது உடலில் 150 பவுனுக்கும் மேற்பட்ட நகைகளை அணிந்துள்ளார். கரோனா தொற்று குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, தங்கத்திலான முகக்கவசம் அணிந்து வரிச்சியூர் செல்வம் காணொலி வெளிட்டுள்ளார். இந்தக் காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.
இதேபோன்று தனது பேரன்கள் இருவருக்கும் தலா 5 பவுன் தங்கத்தினாலான முகக்கவசங்களை அணிவித்துள்ளார்.
இதையும் படிங்க: முகக்கவச உற்பத்தி, விற்பனையின் தற்போதைய நிலை என்ன?