ETV Bharat / state

மறுதேர்வு எழுத விண்ணப்பித்த மாணவிக்காக வெகுநேரம் காத்திருந்த தேர்வு மைய அலுவலர்கள்!

author img

By

Published : Jul 27, 2020, 9:25 PM IST

மதுரை: ஊரடங்கால் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சில பாடத் தேர்வுகளை தவறவிட்ட மாணவர்களுக்கான மறுத்தேர்வில் ஒரு மாணவிக்காக தேர்வு அலுவலர்கள் வெகு நேரம் காத்திருந்தது வியப்பை ஏற்படுத்தியது.

re-exam-student-in-madurai
re-exam-student-in-madurai

தமிழ்நாட்டில் மார்ச் 2ஆம் தேதி தொடங்கி பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றுவந்தது.

கரோனா ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்தும் முடங்கியது. அதனால் தமிழ்நாடு முழுவதும் 743 மாணவர்கள் சில பாடங்களுக்கு தேர்வு எழுத முடியவில்லை.

அதன் காரணமாக அவர்களுக்கு மறுதேர்வு நடத்த கோரிக்கை வைக்கப்பட்டது. அதனடிப்படையில் 743 மாணவர்களுக்கும் மறுதேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி மதுரை மாவட்டத்தில் இன்று(ஜூலை 27) 21 மாணவ, மாணவிகள் மறுத்தேர்விற்கு விண்ணப்பித்திருந்தனர்.

அவர்களில் 15 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் 6 பேர் வருகை தரவில்லை. அதில் குறிப்பாக மதுரை காக்கைபாடினியார் மேல் நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் புவியல் பாட தேர்வெழுத வருகை தரும் மாணவிக்காக வெகு நேரம் அலுவலர்கள் காத்திருந்தனர், இருந்தும் மாணவி வருகை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இன்று 743 மாணவர்கள் எழுதும் 12ஆம் வகுப்பு மறுதேர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.