ETV Bharat / state

புலி வேட்டைக்கு போகும்போது எலிவேட்டை பற்றி பேச வேண்டாம் - ஓபிஎஸ் குறித்து செல்லூர் ராஜூ

Ex.Minister Sellur Raju: அதிமுக சின்னத்தையும், கொடியையும் ஓபிஎஸ் பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் தடை விதித்தது குறித்து செல்லூர் ராஜூ, புலி வேட்டைக்குப் போகும்போது எலி வேட்டை பற்றி பேச வேண்டாம் எனக் கூறினார்.

Ex.Minister Sellur Raju
ஓபிஎஸ் குறித்து செல்லூர் ராஜூ விமர்சனம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 12, 2024, 6:49 AM IST

Updated : Jan 12, 2024, 6:58 AM IST

மதுரை: கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் தமிழக முதலமைச்சரையும், தமிழக அரசையும் அவதூறாகப் பேசியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது அவதூறு சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, குற்றவியல் அரசு வழக்கறிஞர் பழனிச்சாமி என்பவர்ம் மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, நேற்று(ஜன.11) ஆஜராக நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி சிவகடாட்சம் முன்பு அவர் ஆஜரானார். அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை வருகிற பிப்ரவரி 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “நான் ஆர்ப்பாட்டத்தில் உண்மையைத் தான் கூறினேன். ஆனால் என் மீது வழக்கு போட்டுள்ளார்கள். நான் பொதுவாழ்வுக்கு வரும் போது, திமுக தொடர்ந்த கொலை வழக்கிலேயே முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு, அந்த வழக்கில் குற்றமற்றவன் என நிரூபித்து விடுதலையானவன்.

அவதூறு வழக்கெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை. பொதுவாழ்க்கைக்கு வந்த பின்பு, வழக்குகளுக்கு எல்லாம் அதிமுகவினர் பயப்பட மாட்டார்கள். நான் ஆர்ப்பாட்டத்தில் பேசியதைத்தான் தமிழக மக்கள் பேசிக் கொண்டுள்ளனர். நான் மேடையில் பேசியதால், அவதூறு வழக்கு போடுகிறார்கள். குறைகளைக் களைவதை விட்டுவிட்டு, பழைய தகரத்திற்கு பாலிஸ் போடும் வேலையைத் தான் திமுக செய்கிறது.

அதிமுக சின்னம், கொடி ஆகியவற்றை ஓபிஎஸ் பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்தது குறித்த கேள்விக்கு, நாங்கள் புலி வேட்டைக்குச் செல்கிறோம். எலி வேட்டையைப் பற்றிப் பேசாதீர்கள்" என்றார்.

இதையும் படிங்க: அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத் தொகை அறிவித்தது தமிழக அரசு!

Last Updated : Jan 12, 2024, 6:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.