ETV Bharat / state

'மலைகள் மண்ணாவது பூமிக்கே உலை' - சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் - சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்

கிரானைட் கற்களுக்காக மலைகள், குன்றுகள் வெட்டி அழிக்கப்படுவது பூமியின் இருப்பிற்கே உலை வைக்கும் செயல் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், வல்லுநர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மலைகள் மண்ணாவது பூமிக்கே உலையாகும்
மலைகள் மண்ணாவது பூமிக்கே உலையாகும்
author img

By

Published : Nov 30, 2020, 12:41 PM IST

Updated : Dec 2, 2020, 10:51 PM IST

மதுரை: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள மலைகள், குன்றுகள் ஆகியவை வணிக நோக்கங்களுக்காகவும், மக்களின் தேவைகளுக்காகவும் கிரானைட் கற்களாகவும், எம் சாண்ட் மணலாகவும் உடைக்கப்படும் அபாயம் குறித்து சுற்றுச்சூழல் சார்ந்து இயங்கி வரும் பல்வேறு நபர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடுகள், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கடந்த 1996-97 முதல் 2012-13ஆம் ஆண்டுவரை 17 ஆண்டுகளில் கிரானைட் ஏற்றுமதி மூலம் இந்தியா ரூ.52,374 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. இந்திய அளவில் கிரானைட் ஏற்றுமதியில் ஆந்திரா 52 விழுக்காடு, ராஜஸ்தான் 16 விழுக்காடு, கர்நாடகா 15 விழுக்காடு, தமிழ்நாடு 13 விழுக்காடு என முன்னணியில் இருந்து வருகின்றன. ஒருபுறம் அரசு இதனை வணிகமாகப் பார்த்தாலும், மலை சூறையாடப்படுகின்ற காரணத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடு பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், வல்லுநர்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

மலைகள் மண்ணாவது பூமிக்கே உலை

இதுதொடர்பாக மதுரை மாவட்டம் கருங்காலக்குடியைச் சேர்ந்த கட்டுமானப் பொறியாளர் பக்ருதீன் ஈடிவி பாரத்திடம் பேசுகையில், 'மணல், கற்களின் தேவை ஒவ்வொரு ஆண்டும் கூடிக்கொண்டே செல்கிறது. அதே நேரம் வளச்சுரண்டல் நடைபெறாதவாறும் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு மக்கள் தங்களது கட்டுமானத் தேவையை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். கருங்காலக்குடியைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளிலிருந்து வெட்டப்படும் கற்கள் தென் மாவட்டங்கள் முழுவதும் செல்கின்றன. இதனைத் தடுத்து, பண்டைய கால மக்களின் வாழ்வியல் முறையை அடிப்படையாகக் கொண்டு மக்கள் வாழ வேண்டும்' என்றார்.

மத்திய அரசு வழங்கியுள்ள புள்ளி விவரத்தின்படி, இந்தியாவின் மொத்த கிரானைட் உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு ரூ.6,808 கோடி. தமிழ்நாட்டில் மட்டும் 19 மாவட்டங்களில் கிரானைட் உற்பத்தி நடைபெறுகிறது. அதிலும் குறிப்பாக மதுரையின் பங்கு மட்டும் 41.10 விழுக்காடாகும். கடந்த 1996-97 முதல் 2012-13ஆம் ஆண்டுவரை 17 ஆண்டுகளில் மதுரை மாவட்டத்தில் மட்டும் ரூ.2,798 கோடிக்கு கிரானைட் ஏற்றுமதி நடைபெற்றுள்ளது. மேற்குறிப்பிட்ட 17 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த கிரானைட் ஏற்றுமதி 1,51,59,045 கனமீட்டர். இதில், தமிழ்நாட்டின் பங்கு 19,70, 675 கனமீட்டராகும். அதில், மதுரை மாவட்டத்தின் பங்கு 8,09, 947 கனமீட்டர்.

அரசால் அனுமதிக்கப்பட்ட அளவு மற்றும் இடங்களை மீறி ஆழமாகவும், அகலமாகவும் கிரானைட் கற்கள் வெட்டப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, மதுரை மாவட்டத்தில் மட்டும் கிரானைட் கற்கள் வெட்டியெடுப்பதற்கான உரிமத்தை அனைத்து நிறுவனங்களுக்கும் தமிழ்நாடு அரசு ரத்து செய்தது. இதனால் கடந்த 8 ஆண்டுகளாக இங்கு கிரானைட் தொழில் முழுவதுமாக முடங்கியுள்ளது. இந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்த 175 நிறுவனங்களுக்கு தற்போது மதுரை மாவட்டத்தில் இயங்க அனுமதியில்லை.

மணல் தேவைக்காக இதுபோன்ற குன்றுகளை உடைத்து எம் சாண்ட் தயாரிக்க மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கவுள்ளதாக வெளியான தகவல் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, மதுரை அரிட்டாபட்டி பல்லுயிர் சூழல் பாதுகாப்புக் குழு தலைவரும், அந்தக் கிராம ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவருமான ரவிச்சந்திரன் பேசுகையில், 'மலைகளை வெறுமனே கிரானைட் கற்களாகப் பார்ப்பதே தவறு. மலைகள் அமைந்துள்ள பகுதிகளில் தண்ணீர், பல்லுயிர், நில வளம் போன்றவை மிகுந்திருப்பதை இயல்பாகவே காண முடியும். இதன் காரணமாகவே மலைகளை மக்கள் கடவுளாகவே வணங்கி வழிபடுகின்றனர். குன்று பகுதிகளில் பொழியும் மழைநீரானது, அங்கிருந்து வழிந்தோடி மக்களின் நீர் தேவையை பூர்த்தி செய்வதுடன் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும் வழிவகை செய்கிறது. பறவைகள், விலங்குகள், பூச்சிகள் என அனைத்திற்கும் இந்த மலைகளே பல்லுயிர் சூழல் தொகுப்பாக விளங்குகிறது' என்றார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய வழக்கறிஞர் லஜபதிராஜ். 'மதுரையைச் சுற்றி பத்துக்கும் மேற்பட்ட குன்றுகள் உள்ளன. இவை ஒவ்வொன்றிலும் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழியின் தொன்மையைப் பறைசாற்றும் தமிழ் மற்றும் வட்டெழுத்து கல்வெட்டுகளும், ஜைன சமய தீர்த்தங்கரர்கள் உருவச்சிலையும், படுக்கைகளும் உள்ளன. சைவ, வைணவ சமயங்களின் அடையாளமாகத் திகழும் குடைவரைக் கோயில்களும் உள்ளன. பண்பாட்டை காப்பதற்கும் இந்த மலைகள் உறுதுணையாக இருந்துள்ளன என்பதற்கு இவையெல்லாம் சான்றாகும். இதுபோன்ற மலைகளைக் காப்பது சுற்றுச்சூழலுக்காக மட்டுமன்றி, தமிழ் மொழியின் பழமையைக் காப்பதற்கு ஒப்பாகும்' எனக் கூறினார்.

மலைகளும் குன்றுகளும் அந்தந்த பகுதி மக்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த ஒன்றாகும். எனவே, அவற்றை தெய்வ நிலைக்கு உயர்த்தி மக்கள் வணங்கி மகிழ்கின்றனர். இந்நிலையில், மலைகளை வெட்டி அழிப்பது அந்த மக்களின் வாழ்க்கையையே சூறையாடுவதற்கு சமமாகும். இதனை உணர்ந்து அரசு தனது கொள்கை முடிவுகளில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதே இவர்களின் வேண்டுகோள்.

இதையும் படிங்க: வேப்ப மரத்தை பாதுகாக்கும் குழந்தைகள்

Last Updated : Dec 2, 2020, 10:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.