ETV Bharat / state

பூச்சியியல் ஆராய்ச்சி மைய வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

மதுரை: பூச்சியியல் ஆராய்ச்சி மையம் மாற்றப்படுவது தொடர்பான வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்ற மதுரை கிளை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.

high court branch madurai
author img

By

Published : Aug 9, 2019, 2:28 AM IST

மதுரையில் உள்ள பூச்சியியல் ஆராய்ச்சி மையத்தின் நிர்வாகம் புதுச்சோிக்கு மாற்றப்பட்டது. ஆனால் மதுரையில் தொடர்ந்து பூச்சி ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தக்கல் செய்தார். அதில், இந்தியாவிலுள்ள 33 பூச்சியியல் மருத்துவ ஆராய்ச்சி மையங்களில் மதுரையும் ஒன்று. இது மதுரை, சொக்கிகுளத்தில் உள்ளது. இந்த மையத்தில் கொசுக்கள், அதனால் பரவும் நோய்கள், கட்டுப்படுத்தும் முறைகள் குறித்த ஆராய்ச்சிகள் நடக்கின்றன.

இங்குள்ள அருங்காட்சியகத்தில் பல்வேறு வகையான கொசுக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இம்மையத்தை புதுச்சேரிக்கு மாற்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் ஜெனரல் உத்தரவிட்டுள்ளார். இந்த மையம் மதுரையில் இருந்து மாற்றப்பட்டால் தமிழ்நாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.

ஏற்கனவே தமிழ்நாட்டில் கொசுவால் ஏற்படும் டெங்கு, பன்றி காய்ச்சல் ,வைரஸ், மர்ம காய்ச்சலால் உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே மையத்தை புதுவைக்கு மாற்றும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் முன் ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, மதுரையிலுள்ள பூச்சியியல் ஆராய்ச்சி மையத்தை புதுச்சேரிக்கு மாற்றும் விவகாரத்தில், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்,’’ என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், மீண்டும் இந்த மனு இன்று நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், மதுரையில் உள்ள பூச்சியியல் ஆராய்ச்சி மையத்தின் நிர்வாகம் மட்டுமே புதுச்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் மதுரையில் தொடர்ந்து பூச்சியியல் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

Intro:மதுரையில் உள்ள பூச்சியியல் ஆராய்ச்சி மையம் மாற்றப்படுவது குறித்த வழக்கில் உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஒத்திவைப்பு

மதுரையில் உள்ள பூச்சியியல் ஆராய்ச்சி மையத்தின் நிர்வாகம் மட்டுமே புதுச்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் மதுரையில் தொடர்ந்து பூச்சியியல் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது-மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தகவல். வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உத்தரவு.
Body:மதுரையில் உள்ள பூச்சியியல் ஆராய்ச்சி மையம் மாற்றப்படுவது குறித்த வழக்கில் உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஒத்திவைப்பு

மதுரையில் உள்ள பூச்சியியல் ஆராய்ச்சி மையத்தின் நிர்வாகம் மட்டுமே புதுச்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் மதுரையில் தொடர்ந்து பூச்சியியல் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது-மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தகவல். வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உத்தரவு.

மதுரையை கே.கே.ரமேஷ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், இந்தியாவிலுள்ள 33 பூச்சியியல் மருத்துவ ஆராய்ச்சி மையங்களில் ஒன்று மதுரை, சொக்கிகுளத்தில் உள்ளது.

32 ஆண்டுகளாக செயல்படும் இந்த மையத்தில் கொசுக்கள், அதனால் பரவும் நோய்கள், கட்டுப்படுத்தும் முறைகள் குறித்த ஆராய்ச்சிகள் நடக்கின்றன. இங்குள்ள அருங்காட்சியகத்தில் 242 வகையான கொசுக்களில் 91 ஆயிரத்து 600 கொசுக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இம்மையத்தை புதுச்சேரிக்கு மாற்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் ஜெனரல் உத்தரவிட்டுள்ளார்.

இந்த மையம் மதுரையில் இருந்து மாற்றப்பட்டால் தமிழகத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.

ஏற்கனவே தமிழகத்தில் கொசுவால் ஏற்படும் டெங்கு, பன்றி காய்ச்சல் ,வைரஸ் மற்றும் மர்ம காய்ச்சலால் உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே மையத்தை புதுவைக்கு மாற்றும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சசிதரன்,ஆதிகேசவலு ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.

இதை கேட்ட நீதிபதிகள், ‘‘மதுரையிலுள்ள பூச்சியியல் ஆராய்ச்சி மையத்தை புதுச்சேரிக்கு மாற்றும் விவகாரத்தில், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்,’’ என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இந்த மனு இன்று நீதிபதிகள் சத்யநாராயணன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில் , மதுரையில் உள்ள பூச்சியியல் ஆராய்ச்சி மையத்தின் நிர்வாகம் மட்டுமே புதுச்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் மதுரையில் தொடர்ந்து பூச்சியியல் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.