ETV Bharat / state

விபத்தில் உயிரிழந்த பொறியியல் கல்லூரி மாணவர் - நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி வீடியோ

மதுரை: தல்லாக்குளம் அருகே குப்பை லாரி கல்லூரி மாணவர் மீது மோதி அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

accident
accident
author img

By

Published : Mar 12, 2020, 4:48 PM IST

Updated : Mar 12, 2020, 5:05 PM IST

மதுரை தல்லாக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்றுவந்தார். இந்நிலையில், வில்லபுரம் பகுதியில் உள்ள மீனாட்சி நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் காரியப்பட்டியை நோக்கி சென்றபோது, மதுரை மாநகராட்சி குப்பை லாரி மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்ட போக்குவரத்து காவல் துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மதுரை ராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்தியதாக குப்பை லாரி ஓட்டுநர் மீது சந்தேகமிருந்த நிலையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்தனர்.

மதுரையில் நடந்த பயங்கர விபத்து

அதில், அப்பகுதியில் நின்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோ நகர்ந்து செல்ல அதில் இடித்து விடக்கூடாது என்பதற்காக கல்லூரி மாணவர் குப்பை லாரியின் பின்புறம் இடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

மேலும், விபத்து குறித்து அவனியாபுரம் காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சிசிடிவி காட்சிகளை பார்த்த பின்பு ஆட்டோ ஓட்டுனர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அதிமுக எம்பிக்கள் குழு வெளியுறவுத்துறை அமைச்சருடன் சந்திப்பு!

Last Updated : Mar 12, 2020, 5:05 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.