ETV Bharat / state

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உண்டியல் திறப்பு: ரூ.88 லட்சம் வருமானம்! - Madurai

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மற்றும் உப கோயில்களின் உண்டியல் திறக்கப்பட்ட நிலையில் ரூ.88 லட்சம் வருமானமாக பெறப்பட்டுள்ளது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மதுரை மீனாட்சி கோயில் உண்டியல் திறப்பு: ரூ.88 லட்சம் வருமானம்!

author img

By

Published : Dec 20, 2022, 10:30 PM IST

மதுரை: அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவர் திருக்கோயில் துணை ஆணையர் ஆ.அருணாசலம் முன்னிலையில் மீனாட்சி திருக்கோயில் மற்றும் 10 உபகோயில்களின் உண்டியல் திறப்பு நடைபெற்றது.

இதில் ரொக்கமாக 87 ஏழு லட்சத்து 68 ஆயிரத்து 310 ரூபாயும், பலமாற்று பொன் இனங்கள் 540 கிராமும், பலமாற்று வெள்ளி இனங்கள் 725 கிராமும் மற்றும் அயல்நாட்டு நோட்டுகள் 292 என எண்ணிக்கையில் வரப்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்டியல் திறப்பின்போது திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் துணை ஆணையர் நா.சுரேஷ், மீனாட்சி திருக்கோயிலின் தக்கார் பிரதிநிதி, கண்காணிப்பாளர்கள், மதுரை இந்து சமய அறநிலையத்துறை தெற்கு மற்றும் மேலூர் ஆய்வர்கள், திருக்கோயில் பணியாளர்கள், வங்கி பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் பேரவை அமைப்பினர் உள்பட சுமார் 330 நபர்கள் கலந்துகொண்டனர் என மீனாட்சி திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: அண்ணாமலை பல்கலை. பதிவாளரின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.