கரோனா வைரஸ் தொற்று காரணமாக, மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் வழக்கமாக ரத்த தானம் கொடுக்கும் தன்னார்வலர்கள், ரத்தம் கொடுக்க வரவில்லை. இதனால் அங்கு ரத்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அப்பற்றாக்குறையைப் போக்குவதற்காக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முன்வந்தனர். ஆம், உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அரசு ஊழியர் சங்கமும், மதுரை அண்ணாமலை திரையரங்கமும் இனைந்து நடத்திய நடமாடும் ரத்ததான முகாமில் இவர்கள் ரத்தம் கொடுத்தனர்.
இதுதவிர இம்முகாமில் ரத்த தானம் அளிக்க வந்த அனைத்து கொடையாளிகளும் முழுமையாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்பே ரத்ததானம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மேலும் முகாமில் பெறப்பட்ட அனைத்து ரத்தமும் மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவு தளர்வு செய்யப்பட்டது போல் காணப்படும் மதுரை மாநகராட்சி