ETV Bharat / state

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை! பரபரப்பு!

மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 1, 2023, 8:20 PM IST

Updated : Dec 1, 2023, 8:46 PM IST

மதுரை : திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளராக உள்ள டாக்டர் சுரேஷ் பாபு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2018ஆம் தேதி வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது. அமலாக்கத்துறை அதிகாரியாக கடந்த 2018ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் அங்கிட் திவாரி பணியில் சேர்ந்தார். கடந்த ஏப்ரல் மாதம் 2023ஆம் ஆண்டு மதுரைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்

மருத்துவர் சுரேஷ் பாபு மீதான வழக்கு அமலாக்கத்துறை வசம் ஒப்படைக்கப்படுவதாக கூறியதுடன் இதிலிருந்து அவரை காப்பாற்றுவதாகக் கூறி அங்கிட் திவாரி மூன்று கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு மருத்துவர் சுரேஷ் ஒப்புக்கொள்ளாததால் கடைசியில் ரூ.51 லட்சம் என பேரம் பேசி முடிக்கப்பட்டதாகவும் அதில் கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி 20 லட்சம் ரூபாயை முதல் கட்டமாக திண்டுக்கலில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் காரில் வைத்து டாக்டர் சுரேஷ் பாபு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது

மீதித் தொகையை நேற்று (நவ.30) அங்கிட் திவாரி மருத்துவரிடம் வாட்ஸ் அப் கால் மூலம் கேட்டுள்ளார். இது குறித்து நேற்று (நவ. 30) திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் சுரேஷ் பாபு புகார் செய்தார். இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த ஆலோசனைப்படி இன்று (டிச. 1) திண்டுக்கல்லில் உள்ள மதுரை புறவழிச் சாலையில் அதிகாரியின் காரில் 20 லட்சம் ரூபாயை வைத்தனர்.

அந்த காரை எடுத்து அவர் செல்ல முயன்றபோது அவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுற்றி வளைத்தனர். ஆனால் அவர் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றார். பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் சாலையில் கொடைரோட்டில் உள்ள டோல்கேட்டிற்கு தகவல் தெரிவித்து அந்த காரை மடக்கி பிடித்து, அவரை திண்டுக்கல் அலுவலகத்திற்கு அழைத்து வந்து கைது செய்துள்ளதுடன் அவரிடம் இருந்து 20 லட்ச ரூபாயை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே மதுரை தபால் தந்தி நகர் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை உதவி மண்டல அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக வருகை தந்தனர். அமலாக்கத்துறை அலுவலகத்தில் உயர் அதிகாரி இல்லாத நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்ய அனுமதிக்க முடியாது என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நீண்ட நேரமாக காத்திருந்தனர. இதனைத் தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி மதுரை உதவி மண்டல அலுவலகத்தில் பணிபுரிந்து வருவதால் அவர் பயன்படுத்திய அறைகளில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அனுமதி கோரினர்.

இதனிடையே அமலாக்கத்துறை சார்பில் உள்ள வழக்கறிஞர்களும் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வருகை தந்தனர். தொடர்ந்து சோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் மதுரை அமலாக்கத்துறை உதவி மண்டல அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

முதன்முறையாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்துவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் இந்தோ-திபெத் துணை ராணுவ படையைச் சேர்ந்த 50 பேர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

இதையும் படிங்க : லஞ்சப் புகாரில் அமலாக்கத்துறை அதிகாரி கைது! அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை! என்ன நடந்தது? முழு பின்னணி!

Last Updated : Dec 1, 2023, 8:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.