பயணிகளின் போதிய ஆதரவு இல்லாத காரணத்தால் சென்னை-மதுரை-சென்னை தேஜஸ் சிறப்பு ரயில் வருகின்ற ஜனவரி 4ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் சில ரயில்களின் கால அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்
நாளை (25.12.2020) முதல் கன்னியாகுமரி - டெல்லி நிஜாமுதீன் சிறப்பு ரயில் கோவில்பட்டியில் இருந்து இரவு 10.25 மணிக்கு பதிலாக இரவு 10.20 மணிக்கும், சாத்தூரில் இருந்து இரவு 10.50 மணிக்கு பதிலாக இரவு 10.45 மணிக்கும் புறப்படும்.
27.12.2020 முதல் சென்னை-மதுரை வைகை சிறப்பு ரயில் திண்டுக்கல்லில் இருந்து இரவு 08.05 மணிக்கு பதிலாக இரவு 07.55 மணிக்கும், சோழவந்தானில் இருந்து இரவு 08.35 மணிக்கு பதிலாக இரவு 08.30 மணிக்கும் புறப்படும். சென்னை-செங்கோட்டை பொதிகை சிறப்பு ரயில் திண்டுக்கல்லில் இருந்து அதிகாலை 03.35 மணிக்கு பதிலாக அதிகாலை 03.30 மணிக்கு புறப்படும்.
திருநெல்வேலி - சென்னை நெல்லை சிறப்பு ரயில் மதுரையிலிருந்து இரவு 10.25 மணிக்கு பதிலாக இரவு 10.15 மணிக்கும், சோழவந்தானில் இருந்து இரவு 10.45 மணிக்கு பதிலாக இரவு 10.36 மணிக்கும் புறப்படும். சென்னை-மதுரை பாண்டியன் சிறப்பு ரயில் திண்டுக்கல்லில் இருந்து அதிகாலை 04.10 மணிக்கு பதிலாக அதிகாலை 04.05 மணிக்கும், அம்பாத்துரையிலிருந்து அதிகாலை 04.23 மணிக்கு பதிலாக அதிகாலை 04.18 மணிக்கும், கொடைக்கானல் ரோட்டில் இருந்து அதிகாலை 04.35 மணிக்கு பதிலாக அதிகாலை 04.30 மணிக்கும் புறப்படும்.
சென்னை - தூத்துக்குடி முத்துநகர் சிறப்பு ரயில் விருதுநகரிலிருந்து அதிகாலை 03.57 மணிக்கு பதிலாக அதிகாலை 03.55 மணிக்கு புறப்படும். கன்னியாகுமரி சென்னை சிறப்பு ரயில் மதுரையில் இருந்து இரவு 10.10 மணிக்கு பதிலாக இரவு 10.00 மணிக்கு புறப்படும். மதுரை - திருவனந்தபுரம் அமிர்தா சிறப்பு ரயில் பழனியில் இருந்து மாலை 06.40 மணிக்கு பதிலாக மாலை 06.30 மணிக்கும் உடுமலைப்பேட்டையில் இருந்து இரவு 07.15 மணிக்கு பதிலாக இரவு 07.05 மணிக்கும் புறப்படும்.
இதையும் படிங்க:கிறிஸ்துமஸ் அன்று அரைநாள் மட்டும் செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்