மதுரை கூடல் நகரைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் தமிழரசன். இவர், ஏப். 10ஆம் தேதி மதுரை அரசு மருத்துவமனையில் பணிக்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்த காவல் துறையினர், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை காண்பிக்க கூறியுள்ளனர்.
ஆவணங்களை காண்பித்த பிறகும் அவரை செல்ல அனுமதிக்காததால், தான் கரோனா பணிக்குச் செல்லும் மருத்துவர் என கூறியுள்ளார். அப்போது, தல்லாக்குளம் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவல் துறையினர் தமிழரசனைத் தாக்கியதுடன், பொய் வழக்குப் போட்டுவிடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.
![ஹோமியோபதி மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரம் - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-03-hrcsuomotu-script-7204624_12042021164655_1204f_1618226215_1084.jpeg)
இது குறித்து பாதிக்கப்பட்ட மருத்துவர் தமிழரசன், காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன் தாஸ், சம்பவம் தொடர்பாக மூன்று வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மதுரை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: உணவகத்தில் தாக்குதல் நடத்திய உதவி ஆய்வாளர்: மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை