ETV Bharat / state

நில அபகரிப்பு வழக்கில் திமுக மாநில நிர்வாகி கைது!

மதுரை: அரசு ஆவணங்களை போலியாக தயாரித்து நில அபகரிப்பில் ஈடுபட்டதாக திமுக மாநில நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

author img

By

Published : Sep 18, 2019, 7:17 PM IST

dmk

மதுரை புறவழிச்சாலையில் உள்ள SRV சுரேந்திரன் நகர் பகுதியில் பாக்கியலட்சுமி என்பவருக்கு ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் சொத்து உள்ளது. வாரிசு சொத்தான இதை 20க்கும் மேற்பட்டவர்களின் போலியான ஆதார், வாக்காளர் அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை தயாரித்தும், வழக்கறிஞர் ஒருவர் பெயர், அவரது வரிசை எண், அடையாளங்களை போலியான ஆவணங்களாகச் சமர்பித்து அபகரிக்க முயன்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திமுக நிர்வாகி நீதிமன்றத்தில் ஆஜர்

இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் திமுக மாநில மாணவரணி துணைச் செயலாளர் அதலை செந்தில், பத்திர அலுவலக சார் பதிவாளர் உள்ளிட்ட 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், இந்த நில அபகரிப்பு வழக்கில் திமுக மாநில நிர்வாகி அதலை செந்தில் உள்ளிட்ட ஆறு பேரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.

Intro:அரசு ஆவணங்களை போலியாக தயாரித்து நில அபகரிப்பு -

திமுக மாநில நிர்வாகி கைதுBody:அரசு ஆவணங்களை போலியாக தயாரித்து நில அபகரிப்பு -

திமுக மாநில நிர்வாகி கைது

மதுரை பை-பாஸ் SRV சுரேந்திரன் நகர் பகுதியில் பாக்கியலட்சுமி என்பவருக்கு சொந்தமான 5கோடி மதிப்பிலான வாரிசு சொத்தை 20க்கும் மேற்பட்டவர்களின் போலியான ஆதார் , வாக்காளர் அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை தயாரித்தும், வழக்கறிஞர் ஒருவர் பெயர் மற்றும் அவரது வரிசை எண், அடையாளங்களை போலியான ஆவணங்களை சமர்பித்து முறைகேடு செய்து அபகரிக்க முயன்றதாக அளிக்கப்பட்ட புகாரில் மத்திய குற்றபிரிவு போலிசார் திமுக மாநில மாணவரணி துணை செயலாளர் அதலை செந்தில், பத்திர அலுவலக சார் பதிவாளர் உள்ளிட்ட 24பேர் மீது வழக்குபதிவு செய்தனர். இந்நிலையில் இந்த நில அபகரிப்பு வழக்கில் திமுக மாணவரணி மாநில துணை செயலாளர் அதலை செந்தில் உள்ளிட்ட 6பேரை போலிசார் கைது செய்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தினர். போலியான ஆவணங்களை தயாரித்ததை முறையாக ஆய்வு செய்யாத சார்பதிவாளர் மீது வழக்குபதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக நிர்வாகியான அதலை செந்தில்மீது ஏற்கனவே பல்வேறு சொத்து அபகரிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.