கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் முறையாக கிடைக்கின்றதா என்று உறுதி செய்வதோடு, பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று திமுக சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படி, மதுரை திருப்பரங்குன்றம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர்.சரவணன், அவரது பகுதியிலுள்ள மாற்றுத்திறனாளிகள் 30 பேருக்கு ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி, பருப்பு அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் பணிபுரியும் பணியாளர்கள், மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 330 பேருக்கு முகக் கவசம், சானிடைசர், கையுறை உள்ளிட்டவற்றை வழங்கினார்.
இதையும் படிங்க:தொகுதி மேம்பாட்டு நிதியில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிய மதுரை எம்.பி.