ETV Bharat / state

’அதிமுக ஆட்சியை ஒரு நொடியில் கலைத்திருப்போம்’ - ஸ்டாலின் - திமுக கிராம சபை கூட்டம்

மதுரை: திமுக நினைத்திருந்தால் அதிமுக ஆட்சியை ஒரு நொடியில் கலைத்திருக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

mk stalin
ஸ்டாலின்
author img

By

Published : Jan 21, 2021, 1:57 AM IST

மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ள குளத்தில் இன்று திமுக சார்பாக கிராமசபை கூட்டம் நடைபெற்றது. அதில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் கலந்துகொண்டு பொதுமக்களிடையே உரையாடினார். அப்போது காலில் விழ வந்த ஒரு பெண்ணை தடுத்து பேசிய அவர், 'இது அதிமுக கூட்டம் இல்லை. என் காலில் யாரும் விழ வேண்டாம். அதிமுக ஆட்சியை திமுக கலைக்க நினைக்கிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள். திமுக நினைத்திருந்தால் ஒரு நொடியில் இந்த அரசை கலைத்து இருக்க முடியும்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வரப்படும் என அதிமுக அரசு அறிவித்திருந்தது. 2019ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின்போது அடிக்கல் நாட்டியது. தற்போது வரை ஒரு வேலையும் செய்யாமல் அப்படியே இருக்கிறது. அமைச்சர் ஆர்பி உதயகுமார் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டவில்லை என்றால் நான் ராஜினாமா செய்கிறேன் என்று கூறியிருந்தார். தற்போதுவரை ஒரு செங்கல் கூட நட்டுவைக்கவில்லை. வெட்கம், மானம் இருந்திருந்தால் அவர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். அவர் ராஜினாமா செய்ய வேண்டியதில்லை வரும் தேர்தலில் நீங்கள் அவரை தூக்கி எறிய உள்ளீர்கள்’ என்றார்.

கிண்ணிமங்கலத்தைச் சேர்ந்த ஷர்மிளா தேவி என்ற பெண், விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 200 நாள் வேலை வாய்ப்பு திட்டம் ஆக மாற்ற வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தார்.

அதற்கு மறுமொழி தெரிவித்த ஸ்டாலின், ’100 நாளாக வேலை செய்யும் மக்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படவில்லை. திமுக ஆட்சியில் அதனை 150 நாள்களாக உயர்த்துவோம். உயர் நீதிமன்றம் விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய உத்தரவு வழங்கியுள்ளது. அரசு உச்சநீதிமன்றத்திற்கு சென்று தடை வாங்கி உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடனை தள்ளுபடி செய்வோம். திமுக ஆட்சி அமைக்கும் என எங்களை விட உங்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது.

எடப்பாடி தொகுதி மக்கள் என்னிடம் வேண்டுகோள் வைத்தனர். இனிமேல் முதலமைச்சர் பழனிசாமியை அழைக்கும்போது பழனிசாமி என்று மட்டுமே அழையுங்கள். எடப்பாடி பழனிசாமி என்று அழைக்காதீர்கள்.. எங்கள் ஊரின் பெயரை கேவலப்படுத்த வேண்டாம் என்று கூறினர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து பத்து ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் எந்தப் பணிகளும் நடக்கவில்லை. குறிப்பாக திருமங்கலத்தில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைத்து தரவில்லை. விமான நிலையம் செல்லும் பாதையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கவில்லை. பாதாள சாக்கடைத் திட்டம், துணைக்கோள் நகரம் முடிக்கப்படவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்தால் இந்த நிலை மாறும். வருவாய்த்துறை அமைச்சராக இருக்கும் ஆர்பி உதயகுமார் வெள்ளை அடித்து கொண்டிருக்கிறாரே தவிர எந்த ஒரு வேலையும் செய்யவில்லை. அவர் ஜெயலலிதாவிற்கு கோவில் கட்டுகிறார், அது தவறு என்று கூறவில்லை. ஆனால் அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தவர் ஜெயலலிதா. அவரின் மரணத்தை பற்றி உண்மையை கண்டுபிடித்து வெளியே சொல்ல முடியாத நிலையில் அமைச்சராக இருக்கிறார்.

திமுக ஆட்சியில் மக்கள் எதிர்பார்ப்புகளையும் குறைகளையும் தீர்த்து வைப்பது மட்டும் அல்லாமல் ஜெயலலிதாவின் மரணத்திற்கு யார் காரணம் என்று கண்டு பிடிப்பதும் எங்களுடைய வேலை.

திமுக தலைவர் ஸ்டாலின் பேசிய காணொலி

கரோனா தொற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு கொண்டிருந்தபோது இவர்கள் அதிலும் ஊழல் செய்து கொள்ளை அடித்தார்கள். அவற்றையெல்லாம் நிச்சயமாக நாங்கள் வெளிக்கொண்டு வந்து தண்டனை பெற்று தருவோம்’ என்றார்.

இதையும் படிங்க: சசிகலாவை கட்சியில் இணைக்க மறுக்கும் எடப்பாடி... சூடுபிடித்துள்ள தமிழ்நாடு தேர்தல்களம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.