ETV Bharat / state

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஒன்றிய அரசை குற்றம் சாட்டுகிறது திமுக - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ - அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு மத்திய அரசை குற்றம் சாட்டுகிறது திமுக

வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஒன்றிய அரசை திமுக அரசு குறை கூறி வருகிறது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மன்னர் திருமலை நாயக்கரின் பிறந்தநாள்
மன்னர் திருமலை நாயக்கரின் பிறந்தநாள்
author img

By

Published : Jan 18, 2022, 10:10 PM IST

மதுரை: மன்னர் திருமலை நாயக்கரின் 459ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திருமலை நாயக்கரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மதுரையில் அதிமுக சார்பில் மரியாதை செலுத்தி உள்ளோம். திமுக அமைச்சரவையில் 6 பேர் நாயக்கர் சமுதாயத்தில் இருந்தும் இந்த இடத்திற்கு யாரும் வரவில்லை என்பது மிகப்பெரிய குறைபாடாக உள்ளது. திருமலை நாயக்கரின் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாடுவதற்கு திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மன்னர் திருமலை நாயக்கரின் பிறந்தநாள்

இந்திய அரசைப் பொறுத்தவரையில் தமிழ் மொழியை உலகிற்கு எடுத்துச்சொல்ல வேண்டும் என்றுதான் பாரதப்பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார்.

இதுவரை இந்தியாவிற்கு எத்தனையோ பிரதமர்கள் வந்திருக்கிறார்கள். எந்தப் பிரதமரும் தமிழர்களின் பெருமையையும் வரலாற்றையும் தமிழர்களின் கலாசாரத்தையும் எடுத்துக் கூறியவர் எவரும் இல்லை. அதற்கு உரிய பெருமை உள்ளவர், பிரதமர் நரேந்திர மோடி.

குஜராத்தில் பிறந்தவராக இருந்தாலும் தமிழ் மீது பற்று உள்ளவர், மோடி. சீனப்பிரதமரை அழைத்து வந்து தமிழ்நாட்டிற்கு சிறப்பு செய்தவர் பிரதமர் மோடி, அவரின் அனுமதியில் 11 மருத்துவக்கல்லூரி தற்போது தமிழ்நாட்டிற்கு கிடைத்திருக்கிறது.

தனியார் மருத்துவமனைகளோடு போட்டி போடும் அளவிற்கு அரசு மருத்துவமனைகள் தற்போது உள்ளன.

ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறது. வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சியோடு மறைமுகமாக பாஜகவை எதிர்த்து வருகிறது திமுக" என்றார்.

இதையும் படிங்க: திரைப்பட டம்மி ஆயுதங்களை எடுத்துச் செல்வதில் சிக்கல்: நடைமுறைகளை வகுக்கக்கோரி வழக்கு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.