ETV Bharat / state

மதுரையில் தனியார் பைக் டாக்ஸிகளுக்கு அனுமதி இல்லை - ஆட்சியர் அதிரடி உத்தரவு!

author img

By

Published : Apr 13, 2023, 9:06 AM IST

மதுரை மாநகரில் தனியார் பைக் டாக்ஸி நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது எனவும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் ஆட்சியர் அனீஷ் சேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "மதுரை மாநகரத்தில் “Rapido Bike Taxi" என்ற கர்நாடக மாநிலத்தை தலைமையகமாக கொண்ட ஒரு தனியார் நிறுவனம் வாடகை கார்கள் இயக்குவது போல் பொதுமக்களிடம் Online Mobile App வழியாகவும் www.rapido.bike என்ற Website மூலமும் பொதுமக்களை தொடர்பு கொள்கின்றனர்.

அவ்வாறு தொடர்பு கொண்டு மோட்டார் வாகனச் சட்டங்கள், விதிமுறைகளின்படி முறையான அங்கீகாரம் பெறாமல் சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகன உரிமையாளர்களை உறுப்பினர்கள் ஆக மாற்றி மதுரை மாநகரில் அனுமதியற்ற வகையில் Bike Taxiகள் இயக்கி வருவது தெரியவந்துள்ளது.

சுமார் 40-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன உரிமையாளர்கள் மீது மதுரை மாநகர வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மூலம் கடந்த வாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவ்வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டங்களின் அடிப்படையில் சட்டப்படி அங்கிகாரம் பெறாத "Rapido Bike Taxi" நிறுவனத்திடம் Mobile App வழியாக தொடர்பு கொண்டு வாடகைக்கு இரு சக்கர வாகனங்களை இயக்கும் வாகன உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுரை மாநகர போக்குவரத்து காவல் அதிகாரிகள், மதுரை சரக போக்குவரத்து இணை ஆணையர் பொன்செந்தில் நாதன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சிங்கார வேலு (தெற்கு), சித்ரா (வடக்கு), ஆகியோர் இணைந்து "Rapido Bike Taxi" வாகனங்களை பறிமுதல் செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களுக்கு ரூபாய் 10,000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும், பொதுமக்கள் இந்த நிறுவனத்தின் மூலம் தங்களது இரண்டு சக்கர வாகனங்களை வாடகை Bike Taxiக்கு பயன்படுத்தக்கூடாது" என மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: southern railway: மதுரை - குஜராத் இடையே 10 நாட்கள் சிறப்பு ரயில்: எதுக்காக தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.