மதுரை: திருவெறும்பூர் சட்டப்பேரவை உறுப்பினராகவும் அமைச்சராகவும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளார். உள்கட்சி பூசல், முன்விரோதம் காரணமாக திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த நவல்பட்டு விஜயகுமார் என்பவர் அமைச்சருக்கு, கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் அவதூறாகப் பேசி வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
பொது இடங்களில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறித்து, அவதூறாகப் பேசியும் வந்துள்ளார். இதுகுறித்து திமுகவைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் நவல்பட்டு விஜயகுமார் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
அமைச்சருக்கு கொலை மிரட்டல்
இந்த நிலையில் நவல்பட்டு விஜயகுமார் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் முன் பிணைகோரி, மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, மனுதாரர் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால், முன் பிணை வழங்க இயலாது எனக்கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: யோகி ராஜினாமா செய்யவேண்டும் - திருமாவளவன் ட்வீட்