ETV Bharat / state

உயர் அலுவலர்கள் பணியிடை நீக்கம் - காரணம் என்ன? - madurai district news

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், மதுரை மாவட்டம் ஒத்தக்கடை உள்ளிட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றிய உயர் அலுவலர்கள், உதவியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

dismissal-of-senior-officers-in-madurai
dismissal-of-senior-officers-in-madurai
author img

By

Published : Aug 9, 2021, 7:17 AM IST

மதுரை : இதுகுறித்து பத்திரபதிவுத் துறை நேற்று (ஆக.08) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”பதிவுத் துறையில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் எளிதாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் அமைய பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக பதிவுத்துறையில் பொதுமக்கள் அளிக்கும் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டு பொதுக்கள் அளிக்கும் புகார்களின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படுகிறது. மேலும், பதிவுத்துறை தலைவரால் போலி ஆவணப்பதிவினை தடுக்கும் நோக்கில் பல்வேறு சுற்றறிக்கைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பதிவு சட்டத்திற்கு முரணாகவும், பதிவுத்துறை தலைவரால் வழங்கப்பட்டுள்ள சுற்றறிக்கைகளுக்கு முரணாகவும், பதிவுக்கு வரும் பொதுமக்கள் பாதிப்படையும் வகையில் செயல்பட்ட கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக பணியாற்றும் M.ராதாகிருஷ்ணன், ஒத்தகடை சார்பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பில் உள்ள சார்பதிவாளர் M.கார்த்திகேயன், உதவியாளர் M.ஷேக் அப்துல்லா, சேலையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பிலுள்ள சார்பதிவாளர் A.J.ஜார்ஜ் ஆகியோர் பதிவுத்துறை தலைவரால் தற்காலிகப் பணிநீக்கம் செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது” என அதில் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 427 மலை கிராமங்களுக்கு 9 வயது சிறுவன் நாட்டாமை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.