மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவு உள்ளனர். கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
அதன் ஒரு பகுதியாக மதுரை திருமங்கலத்தில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியினை இன்று அமைச்சர் மூர்த்தி தொடங்கிவைத்தார்.
இன்னும் மூன்று நாள்களுக்குள் திருமங்கலம் பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்படும் என அவர் தெரிவித்தார். முன்னதாக திருமங்கலத்தில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக காய்ச்சல் கணக்கெடுப்புப் பணியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு, கரோனா தடுப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் மஹாலில் மூர்த்தி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின்போது மாவட்ட ஆட்சியர் வி. அனீஷ் சேகர் உடனிருந்தார்.