ETV Bharat / state

ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கு ஒத்திவைப்பு

ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக, இயக்குநர் பா. இரஞ்சித் மீது பதியப்பட்ட வழக்கினை ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

rajarajachola  director pa ranjith case hearing date changed  director pa ranjith case  director pa ranjith case about sppech on rajarajacholan  madurai highcourt  madurai news  madurai latest news  மதுரை செய்திகள்  ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சிய வழக்கு  இயக்குநர் பா ரஞ்சித் மீது பதியப்பட்ட வழக்கி  இயக்குநர் பா ரஞ்சித்  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
வழக்கு
author img

By

Published : Aug 4, 2021, 5:21 AM IST

மதுரை: ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக, இயக்குநர் பா. இரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை எதிர்த்து பா. இரஞ்சித் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

நிலமற்றவர்கள் நடத்தப்பட்ட விதம்

அதில், "2019 ஜூன் 5ஆம் தேதி நீலப்புலிகள் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட கூட்டத்தில் பேரரசர் ராஜராஜ சோழனின் வரலாற்று உண்மைகள் சிலவற்றை குறிப்பிட்டேன்.

நிலமற்ற மக்கள் குறிப்பாக டெல்டா பகுதியில் நிலமற்றவர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்த உமர் பாரூக்கின் 'செந்தமிழ் நாட்டு சேரிகள்' எனும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை குறித்தும் பேசினேன்.

பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களையே நான் குறிப்பிட்டு பேசினேன். இந்த தகவலை வேறு பலரும் பேசி உள்ளனர். ஆனால், என்னுடைய பேச்சு மட்டும் சமூக வலைதளங்களில் தவறாகச் சித்தரிக்கப்பட்டு வருகிறது.

நான் உள்நோக்கத்துடன் எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை. மேலும், எனது கருத்து எந்தச் சமூகத்திற்கும் எதிராக அமையவில்லை. ஆகவே, என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

வழக்கு ஒத்திவைப்பு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன், ஒருவர் தனது கருத்தை வெளியிடும் சுதந்திரம் இருக்கிறது என தெரிவித்து, பா. இரஞ்சித் மீதான வழக்கு விசாரணையின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், இதுகுறித்து அரசு தரப்பில் பதிலளிக்கவும் உத்தரவிட்டு, வழக்கினை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: சிவசங்கர் பாபா ஜாமீன் கோரி மனு - சிபிசிஐடி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.