ETV Bharat / state

மின் உருவாக்கம் செய்யப்பட்ட அரிய வகை நூல்கள், ஓலைச்சுவடிகள் பதிவேற்றம் தொடக்கம்!

author img

By

Published : Nov 20, 2020, 10:29 AM IST

மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழக நூலக இணையதளத்தில், மின் உருவாக்கம் செய்யப்பட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான அரிய வகை நூல்கள், ஓலைச்சுவடிகள் பதிவேற்றம் செய்யும் பணி நேற்று(நவ.19) தொடங்கப்பட்டுள்ளது.

Digitalization of rare books in Madurai Kamarajar university library

மதுரை காமராசர் பல்கலைக் கழகமும், சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பொது நூலக இயக்ககமும் இணைந்து 60 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான அரிய வகை நூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகள் மின் உருவாக்கம் செய்யப்பட்டு, மதுரை காமராசர் பல்கலைக்கழக நூலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மின் புத்தகங்களின் பதிவேற்றத்தை மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் கிருஷ்ணன் நேற்று (நவ.19) தொடங்கி வைத்தார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் உள்ள மூன்று லட்சத்துக்கும் மேலான நூல்களில் இருந்து அறுபது வருடங்களுக்கு மேலான பழமையான அரிய தமிழ் இலக்கண இலக்கியங்கள், ஆங்கில இலக்கிய நூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகள் பல்கலைக்கழகத்தில் பதிப்புத் துறையில் வெளியிடப்பட்ட சில நூல்கள், தொலைநிலை கல்வி இயக்ககத்தில் சில பாடப் புத்தகங்களும், மின்உருவாக்கம் செய்யப்பட்டு, மின் புத்தகங்களாக நூலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக நூலகர் சுரேஷ், இந்த மின் உருவாக்க பணியை, பொது நூலக இயக்ககத்துடன் இணைந்து செயல்பட்டார். மாணவர்களும், பொது மக்களும் இந்த மின் புத்தகங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.

மின் உருவாக்கம் செய்யப்பட்ட மின் புத்தகங்களின் தொகுப்பை துணைவேந்தர் பேராசிரியர் மு.கிருஷ்ணனிடம், அண்ணா நூற்றாண்டு நூலக நூலகர் மற்றும் தகவல் அலுவலர் முனைவர் காமாட்சி நேரில் வழங்கினார்.
இந்தநிகழ்ச்சியில் பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் வசந்தா, தமிழ்த்துறை தலைவர் ராமராஜபாண்டியன், அண்ணா நூற்றாண்டு நூலகர் சந்தான பாண்டியன், மதுரை மாவட்ட பொது நூலக அலுவலர் யசோதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.