ETV Bharat / state

சூரிய கிரகணம்: மீனாட்சி அம்மன் கோயில் நடை சாத்தப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் - மதுரை மீனாட்சி அம்மன்

சூரிய கிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் நடை சாத்தப்பட்டதால் வெளியூரில் இருந்து சாமி தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மீனாட்சி அம்மன் நடை சாத்தப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம்

author img

By

Published : Oct 25, 2022, 3:28 PM IST

மதுரை: சூரிய கிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை காலை 11.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை சாத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சூரியகிரகணம் மாலை 5.23 மணிக்குத்தொடங்கி 6.23 மணிக்கு முடிவடைய உள்ள நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் அதன் 22 உபகோயில்களில் இன்று நடைசாத்தப்படுகிறது.

மீனாட்சி அம்மன் கோயிலில் காலசந்தி பூஜை காலத்தில், உச்சிகாலம் மற்றும் சாயரட்சை ஆகிய பூஜைகள் நடைபெற்று கோயில் நடை காலை 11.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை சாத்தப்படுவதால் பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்தில் அர்ச்சனை செய்யவோ, தரிசனம் செய்யவோ அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து காலை 11 மணிக்கு நடை சாத்தப்பட்டதால் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ள ஏராளமான பக்தர்கள் கோயிலுக்குள் செல்லமுடியாமல் கோபுர வாசலில் நின்றவாறே வணங்கிச்சென்றனர். மேலும், கோலாட்ட உற்சவம், சாமி புறப்பாடு இன்று ஒரு நாள் மட்டும் இரவு 7.00 மணிக்குப் பின் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனாட்சி அம்மன் கோயில் நடை சாத்தப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம்

இதையும் படிங்க: திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.