மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வை முன்னிட்டு 6கி.மீ. மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதனை சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ. மாணிக்கம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். காலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த மாரத்தான் போட்டியில் மழை என்றும் பாராமல் பொதுமக்களை பார்த்து டெங்குவை ஒழிப்போம் சுகாதாரம் காப்போம் என கோசமிட்டபடி மிகுந்த ஆர்வமுடன் இளைஞர்கள் ஓடினர்.
இதில் முன்னாள் சேர்மன் ஆர்.எஸ்.ராம்குமார், அரிமா சங்க நிர்வாகிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, பொதுமக்கள் என 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க:பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தாததாலேயே பாதிப்பு - கனிமொழி