மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கரட்டுத்தெருவைச் சேர்ந்த நாகராஜன் - சத்யா தம்பதியினரின் மகள் அன்னபிரியா (17). இவர் திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துவந்தார்.
உறவினர் ஒருவரை அந்த மாணவி காதலித்துவந்ததாகவும், அது பெற்றோருக்குத் தெரியவர வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த மாணவி நேற்று வீட்டைவிட்டு வெளியே சென்றால், மகள் காணாமல்போனதால் அக்கம்பக்கத்தில் அவரது பெற்றோர் தேடிவந்த நிலையில், இன்று காலை அவரது வீட்டருகே உள்ள விவசாய கிணற்றில் அவரது உடல் மிதந்தது.
இது குறித்து தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்துவந்த அலங்காநல்லூர் தீயணைப்புப் படையினர் கிணற்றில் மிதந்த மாணவியின் சடலத்தை மீட்டனர். மாணவி இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்த அலங்காநல்லூர் காவல் துறையினர், அவரது சடலத்தை உடற்கூராய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாரா அல்லது அவரை யாராவது கொலை செய்துவிட்டு சடலத்தை கிணற்றில் வீசி சென்றனரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: இளைஞர் வெட்டிக்கொலை; 7 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு!