மதுரை திருமங்கலத்தில் உள்ள பயணியர் விடுதியில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல வாரிய அடையாள அட்டை வழங்கும் விழா தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை சார்பில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அவர், தொடர்ந்து தொழிலாளர்களிடம் மனுக்கள் பெறும் முகாமையும் தொடங்கி வைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, “பெண் குழந்தைகள் பிறந்தாலே பாவம் சுமை என்று நினைக்கும் அவலத்தைப் போக்கும் விதத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொட்டில் குழந்தை திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அந்த பெண் குழந்தைகளை அரசு வளர்த்து ஆளாக்கும். இந்த திட்டத்திற்காக தான் அன்னை தெரசாவே நேரில் வந்து பாராட்டுகளையும் கூறினார்.
குடியுரிமை சட்டத்தை உருவாக்கிய மத்திய அரசு முழு விளக்கம் அளித்துள்ளது. நாங்கள் தெளிவாக புரிந்திருக்கும் அதனை மக்களிடம் கொண்டு செல்கிறோம் அதில் எந்த ஒரு உள்நோக்கமும் கிடையாது. இதனை திரித்து கூறுபவர்களுக்கு ஏதேனும் உள்நோக்கம் என்பதில்தான் மக்களுக்கு அச்சம் ஏற்படுகிறது. உண்மை செய்திக்கு ஆங்கிலமாக இருந்தாலும் தமிழாக இருந்தாலும் அதன் வடிவம் ஒன்றுதான். அவர் எந்த மொழியில் கேட்டாலும் அந்த மொழியில் சொல்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
தேர்தல் களத்தில் ஆயத்த பணிகளை மேற்கொள்வது நாம் காலங்காலமாக பார்க்கும் ஒன்றுதான். ரஜினி தொண்டர்கள் இடத்திலும் தலைமை இடத்திலும் கூறியிருக்கிறார் தற்போது அது விவாதப் பொருளாக மாறியுள்ளது. விவாதம் செய்வதால் எந்த ஒரு மாற்றமும் ஏற்படப் போவதில்லை.
கொரானா வைரஸ் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்தையும் முதலமைச்சர் எடுத்து வருகிறார். மத்திய இணை அமைச்சர் ஒன்றரை வருடத்தில் எய்ம்ஸ் அமையும் என கூறியிருக்கிறார். செப்டம்பர் மாதம் பணிகள் தொடங்கி அப்போதே அட்மிஷன் போடப்படும் எனக் கூறியுள்ளார். ஒரு ஆண்டு அல்லது இரண்டு ஆண்டுகளில் வானுயர்ந்த கட்டிடங்கள் உருவாகிவிடும். 90% சுற்றுச்சுவர் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. குடிநீர் மின்சாரம் போன்ற அடிப்படை பணிகள் முடிந்த பிறகு மிக விரைவில் வேலைகள் நடைபெறும்” என்றார்.
இதையும் படிங்க: தடை செய்யப்பட்ட கடல் சிப்பிகளைக் கடத்தியதாக இருவர் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து!