ETV Bharat / state

"முக்கிய சாட்சிகள் குறித்து விளக்கமளிக்க வேண்டும்" - உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!

தேனியில் வனத்துறையினர் திட்டமிட்டு தனது தந்தையின் மீது துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்ததாக, இறந்த முதியவர் ஈஸ்வரனின் மகள் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

முக்கிய சாட்சி நாளை வழக்கு குறித்து விளக்கமளிக்க  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2023, 10:42 PM IST

தேனி: வனத்துறையினர் முன்விரோதத்தால் தான் எனது தந்தையை கொலைசெய்துவிட்டனர் என்றும் கொலை செய்த அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, முக்கிய சாட்சியாக கருதப்படும் இறந்த ஈஸ்வரனின் தம்பி நாளை காலை தேனி உதவி காவல் கண்காணிப்பாளரிடம் நேரில் ஆஜராகி வழக்கு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை நவ.30ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் வினோதினி. தேனி வனத்துறையினர் திட்டமிட்டு அவரது தந்தை மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்ததாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "எனது தந்தையான ஈஸ்வரன் விவசாய கூலி வேலை செய்பவர். கம்பம் பகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் தோட்டத்தில், கடந்த 5 வருடமாக தண்ணீர் பாய்ச்சும் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் அதே பகுதியில் வனக்காவலராக பணிபுரியும் திருமுருகன் மற்றும் பிச்சை ஆகியோர் எனது அப்பா ஈஸ்வரனை அடிக்கடி வனப்பகுதிக்கு மரக்கன்று நடுவதற்கும் மற்றும் இதர வேலைக்கும் அழைத்துச் செல்வார்கள். மேலும் திருமுருகன் மற்றும் பிச்சை மூலமாக வனச்சரகர் முரளிதரன், பீட் காப்பாளர் ஜார்ஜ் என்ற பென்னிக்குட்டி, வனக்காப்பாளர் பிரபு மற்றும் வேட்டை தடுப்பு காவலர்களான கமன், ஈஸ்வரன், கார்த்திக், சந்தனகுமார் ஆகியோரும் எனது அப்பாவுடன் மிகவும் நெருங்கி பழகி வந்தனர்.

மேற்படி வனக்காவலர்களுக்கும், வன அலுவலர்களுக்கும், வேட்டை தடுப்பு காவலர்களுக்கும், உணவு மற்றும் அன்றாட தேவைக்கான இதர பொருட்கள் வாங்கி வருவதற்கு உதவியாக எனது அப்பா இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வனக்காவலர்கள் மற்றும் அலுவலர்கள் மது அருந்திக் கொண்டிருந்த போது எனது அப்பாவிடம் உல்லாசமாக இருப்பதற்கு பெண்களை அழைத்து வா என்று தகாத முறையில் பேசியதால் என் அப்பாவிற்கும் அந்த காவலர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அதன்பின்பு என் அப்பா வனத்துறையினரோடு எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை. இருப்பினும் வனக்காவலர் திருமுருகன் மற்றும் வன அலுவலர்கள் என் அப்பாவை நேரில் வந்து வேலை செய்ய வருமாறு வற்புறுத்தினார்கள். அதற்கு மறுப்பு தெரிவித்ததால் என் அப்பாவிற்கு மிரட்டல் விடுத்தனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் 28ம் தேதி முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு வனக்காவலர் திருமுருகன் மற்றும் அவருடன் பணிபுரியும் பிச்சை, முரளிதரன், ஜார்ஜ் என்ற பென்னிகுட்டி, பிரபு, சுமன், ஈஸ்வரன், கார்த்திக், சந்தனகுமார் ஆகியோர்கள் கூட்டாக சேர்ந்து தோட்டத்தில் வழக்கம் போல தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த என் அப்பாவை மிரட்டி வனப்பகுதிக்குள் அடித்து இழுத்துச் சென்று துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்து விட்டார்கள்.

மேலும் வனத்துறையினரை தாக்கியதாகவும், தற்காப்புக்காக சுட்டதாகவும், பொய்யாக என் தந்தை மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். எனது தந்தைக்கு மிகப்பெரிய அநியாயம் நடந்து உள்ளது. வனக்காவலர்கள் சதித்திட்டம் தீட்டி கொலை செய்துள்ளனர். திட்டுமிட்டு என் தந்தை ஈஸ்வரனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த வனக்காவலர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என் குடும்பத்திற்கு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று(நவ.23) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,
இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்படும் இறந்தவரின் சகோதரர் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை என்ற வாதத்தை முன் வைத்தார். இதனைத்தொடர்ந்து மனு தாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குமுளி காவல் ஆய்வாளர் சாட்சியை மிரட்டி அவர் சொல்லும் வாக்குமூலத்தில் கையெழுத்திட மிரட்டுவதாகவும், அதனால் அவரிடம் விளக்கம் அளிக்க விரும்பவில்லை எனவும், காவல் உயர் அதிகாரியிடம் விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்து பதிவு செய்துகொண்ட நீதிபதி, "தேனியில் வனத்துறை துப்பாக்கிச் சூட்டில் பலியான முதியவர் ஈஸ்வரன் உடன் பிறந்த சகோதரர் சேகர் நாளை காலை 10 மணிக்கு தேனி உதவி காவல் கண்காணிப்பாளரிடம் நேரில் ஆஜராகி வழக்கு குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: "குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக அமைச்சர்கள் பேசலாமா?" - சனாதன கருத்து வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.