ETV Bharat / state

தனியார் மருத்துவமனையில் கைவிடப்பட்ட கரோனா நோயாளியை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள் - private

மதுரை: தனியார் மருத்துவமனையில் கைவிடப்பட்ட கரோனா நோயாளி ஒருவரின் உயிரை மதுரை அரசு இராசாசி மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றி சாதனை படைத்துள்ளனர்.

Covid-19 affected patient recovered in rajaji hospital after private hospital abandoned
தனியார் மருத்துவமனையில் கைவிடப்பட்ட கரோனா நோயாளியை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்
author img

By

Published : Sep 8, 2020, 3:14 PM IST

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த 46 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கரோனா மற்றும் மூளையில் ஏற்பட்ட நீர்க்கோப்பு பிரச்னையால் பாதிக்கப்பட்டு சுய நினைவின்றி மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அனுமதிக்கப்பட்டார்.

மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மூளை ரத்தக் குழாய் வீக்கம் மற்றும் ரத்தகசிவு ஏற்பட்டு இரண்டு மாதத்துக்கு முன்பாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகும் உடல்நிலை சரி ஆகாததால், அவரது மூளையில் அதிக நீர்க்கோப்பு ஏற்பட்டு மேலும் இரண்டு முறை அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

இதையடுத்து இந்தப் பெண்மணிக்கு கரோனா வைரஸ் தொற்றும் ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் சுயநினைவின்றி இருந்த அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த நிலையில், மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அந்த பெண்ணின் மூளையில் அதிக நீர்க்கோப்பு ஏற்பட்டு, நீர் அழுத்தம் அதிகமாக இருந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். பின்னர் அவருக்கு மருத்துவர்கள் மணிமாறன், பிரசாத் ஆகியோர் நோயாளியின் மூளையில் ஏற்பட்ட நீர்க்கோப்பை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தற்போது நோயாளிக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவருக்கு காற்று மற்றும் மூளை பிரச்னைக்கான சிகிச்சைகள் ஒரே நேரத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

மிகத் தீவிரமாக செயல்பட்டு அந்தப் பெண்ணின் உயிரை காப்பாற்றிய மருத்துவ குழுவினரை மருத்துவமனை முதல்வர் சங்குமணி பாராட்டினார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.