ETV Bharat / state

வன மேய்ச்சலுக்கு தடை போட்ட நீதிமன்றம்: அழிகிறதா நாட்டு மாட்டினம்? - நீதிமன்றம்

மேய்ச்சல் நில மக்களின் உரிமைகள் மீட்கப்பட வேண்டும் என தொழுவம் அமைப்பின் ஆய்வாளர் முனைவர் கபிலன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

வன மேய்ச்சலுக்கு தடை போட்ட நீதிமன்றம் : அழிகிறதா நாட்டு மாட்டினம்..?

author img

By

Published : Mar 5, 2022, 11:08 PM IST

மதுரை: தமிழ்நாடு முழுவதும் வனப்பகுதிகளுக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்கக்கூடாது என வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, இதுகுறித்து பல்வேறு தரப்பிலும் அதிருப்தி கருத்துகள் கிளம்பியுள்ளன. மேய்ச்சல் சமூக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் பல்வேறு தரப்பினர் கூறியுள்ளனர்.

குறைந்து வரும் மேய்ச்சல் மாடுகள்

மதுரை ஒத்தக்கடையில் உள்ள வேளாண் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் கபிலன், 'தொழுவம்' என்ற அமைப்பின் வாயிலாக கால்நடை வளர்ப்போரை ஒருங்கிணைத்து, நாட்டு மாடுகள் குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

வன மேய்ச்சலுக்கு தடை போட்ட நீதிமன்றம் : அழிகிறதா நாட்டு மாட்டினம்..?
வன மேய்ச்சலுக்கு தடை போட்ட நீதிமன்றம் : அழிகிறதா நாட்டு மாட்டினம்..?

ஈடிவி பாரத் ஊடகத்திற்காக அவரைச் சந்தித்து உரையாடினோம். அப்போது பேசிய முனைவர் கபிலன், "சங்க இலக்கியங்கள் உருவான காலத்திலேயே திணை சார் வாழ்வியலில் மேய்ச்சல் சமூகம் குறித்து விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. வேட்டைத் தொழில் முதன்மையாக இருந்துள்ளது. பிறகு மேய்ச்சல் தொழில், அதற்குப் பிறகுதான் வேளாண் தொழில் உருவாகிறது.

தென் மாவட்டங்களில் மேய்ச்சல் தொழில் மிகச் சிறந்து விளங்கியுள்ளது. குறிப்பாக வைகை நதி தோன்றும் தேனி மாவட்டத்திலிருந்து மதுரை வழியாகச் சென்று முடிவடையும் ராமநாதபுரம் வரை, கரையின் இரண்டு புறங்களிலும் மேய்ச்சல் நிலங்கள் மிக அதிகமாக இருந்தன.

மேய்ச்சல் சமூகத்தில் ஈடுபட்ட மக்களை சங்க இலக்கியங்கள், பசுக்களை கூட்டமாக மேய்க்கும் கோவினத்து ஆயர், எருமை மாடுகளை மேய்க்கும் கோட்டினத்து ஆயர், செம்மறி ஆடுகளை மேய்க்கும் புள்ளினத்து ஆயர் என மூன்று வகையாகப் பிரிக்கின்றன. இன்று வரை அக்குறிப்பிட்ட பிரிவுகளின் அடிப்படையில் மேய்ச்சல் சமூகம் இயங்கி வருகிறது.

மேய்ச்சல் சமூக மக்கள் இதுவரை அரசோ, தனி நபரோ வேறு எவரின் ஒத்துழைப்போ, கரிசனமோ இன்றி தற்சார்புடன் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக பசுக்களை மந்தை முறையில், தனித்துவமான மேய்ச்சல் முறையைப் பின்பற்றி வளர்க்கக் கூடியவர்கள் சுமாராக 10 லட்சம் மாடுகளைக் கொண்டிருந்தனர். இது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை.

ஆனால் தற்போது 90 ஆயிரம் மாடுகள் மட்டுமே அவர்களிடம் உள்ளன. இதற்குக் காரணம் அண்மையில் உருவான நான்கு வழிச்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு நிலம் சார்ந்த வளர்ச்சி நடவடிக்கைகள். அந்தந்த பருவச்சூழலுக்கு ஏற்ப தங்கள் கால்நடைகளை ஓட்டிக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் சுற்றித்திரிந்த மக்களுக்கு, தற்போது மேய்ச்சல் நிலங்கள் மிக அரிதாகிவிட்டன.

இயற்கையின் சமநிலை பாதிக்கும் அபாயம்

மேய்ச்சல் நிலங்களும் சரி, அங்கு மேயும் கால்நடைகளும் சரி பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு முக்கிய காரணிகளாக அமைகின்றன. இது மிக இயல்பான இயற்கைச் சுழற்சி முறையாகும். இயற்கை முறையில் வேளாண்மை செய்யக்கூடிய உழவர்களுக்கு இந்த மாடுகளின் சாணங்களே மிக முக்கிய எருவாய் அமைகின்றன. கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணை வளமாக வைத்திருப்பவை இந்தக் கிடை மாடுகளும், மலை மாடுகளும்தான்.

ஆங்கிலேயர் காலத்தில் பெரும்பாலான மேய்ச்சல் நிலங்கள் புறம்போக்கு நிலங்களாகக் கணக்கிடப்பட்டதன் விளைவாக அனைத்து கிராமப்புறங்களிலும் விவசாயத்திற்குப் பயன்படாத நிலங்களாகவும், மக்கள் பயன்பாடற்ற நிலங்களாகவும் வரையறை செய்யப்பட்டு புறக்கணிக்கப்பட்டன.

விளைவு, அதிகாரம், ஆள், பண பலம் உள்ள நபர்கள் அந்நிலங்களை கையகப்படுத்தி, முற்றிலுமாகத் தனியுடமை ஆக்கிக் கொண்டுவிட்டார்கள். குறிப்பாக, மதுரை மாவட்டம் திருவாதவூர் அருகேயுள்ள இடையபட்டி கிராமம், சுமார் 2 ஆயிரம் ஏக்கர் மேய்ச்சல் நிலங்களைக் கொண்டிருந்த மண் ஆகும். ஆனால் இன்றைக்கு அந்த நிலங்கள் அனைத்திலும், தற்போது 10-க்கும் மேற்பட்ட ஒன்றிய, மாநில அரசுகளின் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளில் இருந்த சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளின் வளர்ப்பு முறைகள் கைவிடப்பட்டு, அதனைச் சார்ந்து வாழும் மக்கள் கூலி வேலைகளுக்குச் சென்றுவிட்டனர்.

ஆஸ்திரேலியா, சுவிட்ஸர்லாந்து மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகள் மேய்ச்சலில் ஈடுபடும் உயிரினங்களைக் காப்பாற்றும் வேலைகளில் இறங்கியுள்ளன. அங்குள்ள மலைப்பகுதிகளில், நிலங்களில், காடுகளில் நிகழும் காட்டுத் தீ சம்பவங்களைத் தடுப்பதற்காக மாடுகள் மேய்ந்தால், தலா ரூ.10 என்ற கணக்கில் அந்த உயிரினங்களுக்கு, மேய்ச்சல் காரர்களுக்கு வழங்குகின்றனர். இதற்கு காரணம் மேய்ச்சல் கால்நடைகளின் முக்கியத்துவத்தை அவர்கள் முழுவதுமாக உணர்ந்துள்ளனர் என்பதுதான். ஐக்கிய நாடுகள் அவை 2026-ஆம் ஆண்டை மேய்ச்சல் நிலங்கள் மற்றும் மேய்ச்சல் சமூகத்தினருக்கான ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது" எனக் கூறினார்.

அழிந்து வரும் மேய்ச்சல் சமூகம்

மேலும் அவர் கூறுகையில், "ஆனால், முரண்பாடாக இங்கு மேய்ச்சல் சமூக மக்களுக்கு எந்தவிதமான சமூகப் பாதுகாப்பும் இல்லை. வனத்துறையால் அவர்களுக்கு பெரும் இடர்ப்பாடு ஏற்படுகிறது. மேய்ச்சலுக்கு இடமில்லாத காரணத்தால் வனப்பகுதிகளுக்கு செல்லும் கீதாரிகளிடம் வனத்துறை அபராதம் விதிக்கிறது. இந்த அபராதமும் கூட பல ஆயிரக்கணக்கில் இருக்கிறது என்பது வேதனைக்குரியது.

இதன் காரணமாக மாடுகளை விற்றுவிட்டு தங்கள் பாரம்பரிய தொழிலிலிருந்து வெளியேறும் நிலை உருவாக்கப்படுகிறது. மருத்துவர் இல்லாத இடத்தில் வேறொரு மருத்துவரோ, ஆசிரியர் இல்லாத இடத்தில் வேறொரு ஆசிரியரோ அமர்த்திக் கொள்ளலாம். ஆனால் பாரம்பரிய அறிவு கொண்ட மேயச்சல் சமூகமான கீதாரிகளை இழந்தால் இந்த மண்ணுக்கும், சுற்றுச் சூழலுக்கும் பெருங்கேடு ஏற்படும்.

குறிப்பாக இந்திய அளவில் மேய்ச்சலில் ஈடுபடுத்தக்கூடிய செம்மறி ஆடுகள் 41 இனங்கள் உள்ளன. அதில் 11 இனங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. மற்ற எந்த மாநிலத்திலும் இவ்வளவு எண்ணிக்கையில் ஆட்டு இனங்கள் கிடையாது. அதுபோன்று, மாடுகளைப் பொறுத்தவரை, 11-க்கும் மேற்பட்ட பாரம்பரிய மாட்டினங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அவற்றில் நான்கு இனங்கள் ஒன்றிய அரசால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தற்போது நடைபெற்ற வழக்கில் கூட தேனி மலை மாடுகள் பதிவு செய்யப்படாத காரணத்தால் மேய்ச்சலுக்கு அனுமதிக்கப்படவில்லை என்பது காரணமாக கூறப்பட்டுள்ளது. ஆனால் தேனி மலை மாடுகளைப் பதிவு செய்ய வேண்டிய அலுவலர்களின் பிழை அது.

புலிக்குளம், காங்கேயம், உம்பளாச்சேரி போன்ற இனங்களெல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளன. வரக்கூடிய காலங்களில் இந்தத் தவறும் நிவர்த்தி செய்யப்படும். இந்த மலை மாடுகளையும், கிடை மாடுகளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசுக்கு உண்டு" என்றார்.

தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை

மேலும் அவர் கூறுகையில், "தமிழ்நாடு அரசு தலையிட்டு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய வேண்டும். மலை மாடுகள், கிடை மாடுகள் குறித்து ஆய்வாளர்களின் உதவியோடு இவற்றின் பலன்கள், பிரச்சனைகள் குறித்து தெளிவாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேய்ச்சலில் ஈடுபடுவோர் மலை, காட்டுக்குள் செல்வதற்கும் பாரம்பரியமான உரிமையைப் பெறுவதற்குமான வன உரிமைச் சட்டம் 2006 வரையறை செய்கிறது. அதில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்வது மிக அவசியம்" எனக் கூறினார்.

இதையும் படிங்க:சென்னையில் ஆட்சியர்களுடன் மாநாடு - ஸ்டாலினின் 'சிறப்பான' வியூகம்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.