ETV Bharat / state

கடன் வசூல் தீர்ப்பாயத்தில் விசாரணை அலுவலரை நியமிக்க நீதிமன்றம் உத்தரவு! - Union Ministry of Finance

மதுரையில் உள்ள கடன் வசூல் தீர்ப்பாயத்தில் விசாரணை அதிகாரியை 2 வாரத்தில் நியமிக்க மத்திய நிதி அமைச்சக செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கடன் வசூல் தீர்ப்பாயத்தில் விசாரணை அதிகாரியை நியமிக்க நீதிமன்றம் உத்தரவு!

author img

By

Published : Nov 7, 2022, 10:46 PM IST

மதுரை: மதுரையில் உள்ள கடன் வசூல் தீர்ப்பாய வழக்கறிஞர் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,

’தொழிற்சாலைகள் இயக்குவதற்கும், வீடு கட்டுவதற்கும், விவசாய மேம்பாட்டிற்கும் சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் நடத்துவதற்கும் என சொத்துகளை அடமானம் வைத்து பல லட்சம் முதல் பல கோடி வரை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பலர் கடன் வாங்கியுள்ளனர்.

இவ்வாறு வங்களில் பெறப்பட்ட கடனை பல்வேறு காரணங்களால் முறையாக செலுத்த முடியாமல் இருக்கின்றனர். அவ்வாறான சூழலில் வங்கி மேலாளரே, கடன் செலுத்தாத நபருக்கு நோட்டீஸ் அனுப்பி, வாங்கிய கடனுக்காக வாடிக்கையாளருக்கு நோட்டீஸ் அனுப்பி, அடமானமாக வைக்கப்பட்ட சொத்துகளை ஏலம் விட்டு, வாடிக்கையாளர் செலுத்த வேண்டிய கடனை நிவர்த்தி செய்துகொள்ளலாம். அதனடிப்படையில், இதற்கு விதிமுறைகள் படி, வங்கி மேலாளர்களுக்கே அதிகாரம் உள்ளது.

இவ்வாறு கடன் செலுத்தாத வாடிக்கையாளர்களின் சொத்தை ஏலம் விடுவதற்கு வங்கி மேலாளர் நோட்டீஸ் அனுப்பிய பிறகு, வாடிக்கையாளர் நிலுவை கடனை கட்டி சொத்து ஏலம் விடுவதை தடுக்க உடனடியாக உதவக்கூடிய அமைப்பாக கடன் வசூல் தீர்ப்பாயம் உள்ளது.

இந்த கடன் வசூல் தீர்ப்பாயம், மத்திய நிதி அமைச்சகத்தின் கட்டுபாட்டில் இயங்குகிறது. மதுரையில் உள்ள கடன் வசூல் தீர்ப்பாயத்தில், 12 மாவட்டங்களில் வங்கிகளில் வாங்கிய கடன் நிலுவை தொடர்பாக வழக்கறிஞர்கள் உதவியுடன் மனு தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம்.

கடன் வசூல் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்படும், வழக்குகளை விசாரணை அலுவலர் (PROCESSING OFFICER)விசாரித்து தீர்ப்பு வழங்குவார். இந்த விசாரணை அலுவலர், மாவட்ட நீதிபதி நிலையில் உள்ளவராக இருக்க வேண்டும். கடன் வசூல் தீர்ப்பாய விசாரணை அலுவலரை மத்திய நிதி அமைச்சகம் தான் நியமிக்க வேண்டும்.

ஆனால், மதுரையில் உள்ள கடன் வசூல் தீர்ப்பாயத்தில், கடந்த 2 ஆண்டுகளாக விசாரணை அலுவலர் நியமிக்கப்படாமல் உள்ளது. இதனால் வங்கி அலுவலர்களும், கடன் பெற்றோரும் பெரும் இழப்பிற்கு ஆளாகின்றனர். எனவே, மதுரையில் உள்ள கடன் வசூல் தீர்ப்பாயத்தில், கடந்த 2 ஆண்டுகளாக நியமிக்கப்படாமல் உள்ள விசாரணை அலுவலரை நியமிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்தியநாராயணபிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது விரைவில் விசாரணை அலுவலரை நியமிக்க உத்தரவிட வேண்டும் எனக்கூறினார். இதைத்தொடர்ந்து நீதிபதிகள், மதுரையில் உள்ள கடன் வசூல் தீர்ப்பாயத்தில் விசாரணை அலுவலர் நியமிக்கப்படாததால், அந்த வழக்குகள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு தான் விசாரணைக்கு வருகிறது.

இதனால் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு தேவையற்ற பணி சுமை ஏற்படுகிறது. எனவே 2 வாரத்தில் மதுரையில் உள்ள கடன் வசூல் தீர்ப்பாய அலுவலரை மத்திய நிதி அமைச்சகம் நியமிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: கட்டடங்கள் விதிமீறல் வழக்கு - நகர், ஊரமைப்புச்சட்டத்தை திரும்பப்பெற நீதிமன்றம் கருத்து

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.