ETV Bharat / state

கட்டுமானத் தொழிலாளர்கள் உறுப்பினர் பதிவு - ஆன்லைன் மூலம் புதுப்பித்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதி!

மதுரை : தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் பதிவை தபால் மூலமாகவோ ஆன்லைன் மூலமாகவோ பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கட்டுமானத் தொழிலாளர்கள் உறுப்பினர் பதிவை ஆன்லைன் மூலம் புதுப்பித்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதி!

author img

By

Published : Aug 20, 2020, 4:34 PM IST

இது தொடர்பாக தமிழ்நாடு கட்டிட சங்கத்தின் தலைவர் பொன்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில்,"தமிழ்நாட்டில் கட்டிடத் தொழிலாளர்கள் இந்த கரானா தோற்று காலத்தில் வேலை இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் . இவர்களுக்கு தமிழ்நாடு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்ட அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கும் நலத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

ஆனால், நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்டு உறுப்பினர் பதிவை புதுப்பித்த தொழிலாளர்களுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் வீதம் என இரண்டு முறை வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள 2000 ரூபாய் போதுமானதாக இல்லை.

மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழ்நாடு அரசு கட்டிட தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ள நிவாரணத் தொகை மிக, மிக குறைவானது ஆகும்.

எனவே, கட்டுமான தொழிலாளர்களுக்கு நிவாரண நிதியாக 5 ஆயிரம் வழங்க உத்தரவிட வேண்டும்.

மேலும், கட்டிடத் தொழிலாளர்கள் பெரும்பாலும் அதிக கல்வியறிவு இல்லாதவர்களாக இருப்பதால் இவர்கள் பெரும்பாலான தொழிலாளர்கள் தங்களது பதிவை புதுப்பிக்காமல் விட்டுவிட்டனர். அவ்வாறு, புதுப்பிக்காமல் உள்ள தொழிலாளர்களுக்கும் அந்த நிவராண நிதியான 5 ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனுவானது மதுரை கிளை நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாரயணன், ராஜமாணிக்கம் அமர்வுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் வில்சன், "நல வாரியத்தில் உறுப்பினர் பதிவை புதுப்பிக்காதவர்களும் நிவாரண உதவி பெறுவதற்கு தகுதி உடையவர்களே என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவில் தெரிவித்துள்ளது.

எனவே, பதிவை புதுப்பிக்க கட்டுமான தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள் தங்களது பதிவை புதுப்பித்துக் கொள்ள நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும்" என கோரினார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், தற்போது கரோனா தொற்றுநோய் பரவும் பேரிடர் காலம் நிலவுவதால் நல வாரியத்தில் இணைய விரும்பும் உறுப்பினர்கள் பதிவு தபால் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து தங்களது பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம்.

உறுப்பினர்கள் பதிவை புதுப்பிப்பதற்கு கிராம நிர்வாக அலுவலர் சான்று அவசியம் என ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவு உள்ளது.

இருப்பினும், தற்போது உள்ள சூழலில் அதற்கு பதிலாக உறுப்பினர்கள் ஆதார் அட்டை, தேர்தல் அட்டை போன்ற அடையாளச் சான்றிதழ்களை இணைத்து தங்களது பதிவுகளை புதுப்பித்துக் கொள்ளலாம் என உத்தரவு பிறப்பித்து வழக்கின் வரும் விசாரணை 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.