ETV Bharat / state

காவல் துறையினரின் மன அழுத்த பரிசோதனை - பிரேம் ஆனந்த் சின்ஹா ஐபிஎஸ் - madurai police

மதுரை: மாவட்டத்தில் பணியாற்றக்கூடிய காவல் துறையினருக்கு மன அழுத்த பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று மதுரை மாநகர புதிய காவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்தார்.

prem anand sinha ips
prem anand sinha ips
author img

By

Published : Jul 5, 2020, 3:25 PM IST

Updated : Jul 5, 2020, 3:42 PM IST

மதுரை மாநகர காவல் துறை ஆணையராக பிரேம் ஆனந்த் சின்ஹா இன்று பதவியேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மதுரை மாநகரில் மக்களுக்கான சேவையை சிறப்பாக செய்வேன், குற்றங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா தடுப்பு பணிகளில் காவல் துறையினரை சிறப்பாக ஈடுபடுத்துவோம், காவல் துறையினரை பொதுமக்கள் எளிதாக அணுகும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

குற்றங்களை கட்டுப்படுத்த தகவல் தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்தவுள்ளோம். மாநகர பகுதிகளில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் செயல்பாட்டிற்கு தடை விதிப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும். குற்றங்களில் ஈடுபட்டால் சட்டப்படி மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணைக்கு வருபவர்களை தேவையின்றி தவறான வார்த்தைகளில் பேசவோ, அடிக்கவோ கூடாது என காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநகர் பகுதிகளில் கொலை, கொள்ளை குற்றவியல் சம்பவங்களை தடுக்க அதிக அளவிற்கான வாகன சோதனை நடத்தப்படும். மதுரை மாநகர பகுதிகளில் பணிபுரியும் காவல் துறையினருக்கு மன அழுத்தம் உள்ளதா என்பது குறித்து பரிசோதிக்கப்படும். காவல் நிலையங்கள், பொது இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள் குறித்து அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார்.

பிரேம் ஆனந்த் சின்ஹா ஐபிஎஸ்

இதையும் படிங்க: அதிகார அத்துமீறல்: லாக்கப் டார்ச்சரால் வாழ்க்கையை இழந்து நீதிக்காக காத்திருக்கும் யேசுதாஸ்

Last Updated : Jul 5, 2020, 3:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.